வாழை நாரில் இருந்து ஜீன்ஸ் பேன்ட் தயாரிக்கலாம்… சென்னை நெசவாளர்கள் சாதனை..!

bananafibrejeans2சென்னை அருகில் உள்ள அனக்கபுதூர் கிராமம் ஒரு நெசவாளர்கள் கிராமம் ஆகும். இவர்கள் சென்னை மற்றும் இல்லாமல் உலகம் முழுவதும் பிரபலமானவர் என்றால் உங்களால் நம்ப முடிகின்றதா?

நூல் விலை உயர்வு, சாயப்பட்டரை இழுத்து முடியது போன்ற பிரச்சனைகளில் நெசவாளர்கள் சிக்கி தவிக்கும் சூழலில் அனக்கபுதூர் கிராம மக்கள் சற்று வித்தியாசமாக வாழை நார் பயன்படுத்தி ஜீன்ஸ் பேண்ட் தயாரித்து அதனை ஏற்றுமதி செய்யத் துவங்கியுள்ளனஎ என்றால் ஆச்சர்யமாக இருக்கின்றது.

இயற்கை தயாரிப்பு

டெனிம் போன்றே தோற்றம் உள்ள இந்த ஜீன்ஸ் பேன்ட்டுகள் காட்சி அளிப்பது இனனோர் சிறப்பு. ஜீன்ஸ் பேன்ட் பட்டன் முதல் அனைத்து இவர்கள் இயற்கை முறையில் தயாரித்து அன்மையில் அறிமுகப்படுத்தி உள்ளனர்.

இளவம் பஞ்சு புடவை

2014-ம் ஆண்டு இங்கு உள்ள நெசவாளர்கள் இளவம் பஞ்சு மூலமாகப் புடவைகள் தயாரித்து அறிமுகம் செய்துள்ளனர்.

டெனிம் போன்ற புதிய ஜீன்ஸ்

வாழை நார் மற்றும் பஞ்சு இரண்டையும் சேர்த்து டெனிம் போன்ற இந்தப் புதிய ஜீன்ஸ் துனியை உருவாக்கியுள்ளதாகச் சணல் நெசவாளர்கள் சங்கத்தின் தலைவர் சேகர் தெரிவித்தார்.

கோடைக்கு ஏற்றது

இந்த ஜீன்ஸ் ஆடைகள் அதிக நீரை உறிஞ்சும் அதே நேரம் கோடைக்காலத்திற்கு ஏற்றதாகவும் இருக்கும் என்று தெரிவித்தார்.

தேங்காய் ஓடுகளில் பட்டன்

இப்போது இங்குள்ள நெசவாளர்கள் ஜீன்ஸ் பேண்ட் மற்றும் ஸ்கர்ட்களைத் தயாரித்து வருவதாகத் தெரிவித்தனர். அதே நேரம் இந்த ஆடைகளில் பயன்படுத்தப்படும் பட்டன்கள் தேங்காய் ஓடுகள் போன்றவற்றைப் பயன்படுத்தி இயற்கையாகவே செய்துள்ளனர். அதே நேரம் இயற்கையான வண்ணங்களைப் பயன்படுத்தி மட்டுமே ஆடைகளுக்கு வண்ணம் அளிக்கின்றனர்.

ஜீன்ஸ் பேன்ட் வெளியீடு

சேகர் புதுமையான சோதனைகள் செய்து இது வரை வெவ்வேறு விதமான நெசவு முறைகளை அறிமுகப்படுத்தியுள்ளதாகவும் இங்குள்ளவர்கள் கூறுகின்றனர். இப்போது இங்கு உள்ள நெசவாளர்கள் இயற்கை முறையில் உருவாக்கிய ஜின்ஸ் பேன்ட்டுகளை அந்தமான் நிக்கோபரினை சேர்ந்த மாணவர்கள் மூலம் அறிமுகச் செய்துள்ளார்.

tamil.goodreturns.in

TAGS: