2 மாதத்தில் ரூ.380 கோடி பணப் பரிமாற்றம்: முதல்வர் எடப்பாடிக்கு வந்த டெல்லி அழைப்பு

edappadi-palanisamyகடந்த 2 மாதங்களில் மட்டும் ரூ.380 கோடி பணப்பரிமாற்றம் நடந்ததற்கான ஆதாரம் இருப்பதாக டெல்லியில் இருந்து வந்த தொலைபேசி அழைப்பால் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அதிர்ந்து போயுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதிமுக இணைப்பு பேச்சுவார்த்தை, தினகரனை ஒதுக்கி வைப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளால் பாஜக இனி கட்சி உள்விவகாரங்களில் தலையிடாது என நினைத்துக் கொண்டிருந்தார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.

இதனால் விசாரணையின் பேரில் டெல்லியில் முகாமிட்டிருக்கும் டிடிவி தினகரனுடன் ஆட்சி தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி தொலைபேசியில் அழைத்து பேசியதாக கூறப்படுகிறது.

ஆனால் அதன் அடுத்த சில மணி நேரத்தில் டெல்லியில் இருந்து பேசிய மத்திய அரசின் மூத்த அதிகாரி ஒருவர், 24 மணி நேரமும் கண்காணிக்கப்படுவதாகவும், கடந்த 2 மாதங்களில் முதலமைச்சரானது முதல் இதுவரை ரூ.380 கோடி பணப் பரிமாற்றம் நடந்திருப்பதற்கான ஆதாரம் இருப்பதாகவும் அந்த அதிகாரி விளக்கியுள்ளார்.

புள்ளி விவரத்துடன் ரூ380 கோடி பணப் பரிமாற்றத்தை டெல்லி அதிகாரி சொல்ல சொல்ல முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கடும் அதிர்ச்சியில் உறைந்துள்ளதாக கூறப்படுகிறது.

முக்கிய அமைச்சர்களுக்கும் இத்தகவல் தெரிவிக்கப்பட அனைவருமே பீதியில் உறைந்து போயுள்ளார்களாம்.

-lankasri.com

TAGS: