வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுத்தால் 5 ஆண்டு தேர்தலில் போட்டியிட தடை மத்திய அரசுக்கு சிபாரிசு செய்ய தேர்தல் கமி‌ஷன் முடிவு

bribeவாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுத்தால் 5 ஆண்டு தேர்தலில் போட்டியிட தடை விதிக்க மத்திய அரசுக்கு சிபாரிசு செய்ய தேர்தல் கமி‌ஷன் முடிவு செய்துள்ளது.

புதுடெல்லி,

வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுத்தால் 5 ஆண்டு தேர்தலில் போட்டியிட தடை விதிக்க மத்திய அரசுக்கு சிபாரிசு செய்ய தேர்தல் கமி‌ஷன் முடிவு செய்துள்ளது.

பணப்பட்டுவாடாஜெயலலிதா மறைவைத்தொடர்ந்து காலியாக இருந்த ஆர்.கே.நகர் சட்டமன்ற தொகுதிக்கு கடந்த மாதம் 12–ந்தேதி இடைத்தேர்தல் நடைபெறுவதாக இருந்தது. இந்தநிலையில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா (லஞ்சம்) செய்ததாக பலர் கையும், களவுமாக பிடிபட்டனர். அவர்களிடம் இருந்து பல லட்ச ரூபாயும் பறிமுதல் செய்யப்பட்டது.

இதுதவிர வாக்காளர்களுக்கு பால் வாங்க டோக்கன் வழங்குவது, செல்போன்களுக்கு முன்தொகை செலுத்துவது, பத்திரிகை சந்தா பெற்றுத் தருவது, கடைகளில் மளிகை பொருட்கள் மற்றும் பாத்திரங்கள் வாங்க டோக்கன் வினியோகிப்பது, மொபைல் ‘வாலெட்’ மற்றும் வங்கி சேமிப்பு கணக்குகளில் பணம் போடுவது போன்ற பல்வேறு நூதன வழிகளை அரசியல் கட்சிகள் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் கையாண்டன.

அதிக அளவில் தேர்தல் அதிகாரிகள் மற்றும் பறக்கும் படையினரை நியமித்தும் பணப்பட்டுவாடா தடுக்க முடியாமல் தேர்தல் கமி‌ஷன் தத்தளித்தது.

தடை செய்ய கோரிக்கைபின்னர், வேறு வழியின்றி இடைத்தேர்தல் நடத்துவதை தேர்தல் கமி‌ஷன் ஒத்தி வைத்தது. ஆர்.கே.நகரில் இன்னும் சில மாதங்களுக்கு பின்பே இடைத்தேர்தல் நடைபெறும் என்று கூறப்படுகிறது. இந்தநிலையில் தேர்தலின்போது பணப்பட்டுவாடாவில் ஈடுபடும் வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிட தடை விதிக்கவேண்டும் என்ற கோரிக்கை நாடு முழுவதும் எழுந்து உள்ளது.

தற்போதைய மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின்படி வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுப்பதன் அடிப்படையில் ஒரு வேட்பாளரை தகுதி நீக்கம் செய்ய தேர்தல் கமி‌ஷனுக்கு அதிகாரம் கிடையாது.

ஆள்பலத்தை பயன்படுத்துவது உறுதி செய்தால் மட்டுமே சம்பந்தப்பட்ட தொகுதியில் தேர்தலை தள்ளி வைக்கும் அதிகாரம் தற்போது தேர்தல் கமி‌ஷனிடம் இருக்கிறது.

மத்திய அரசுக்கு சிபாரிசுஇதனால், மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 324–ல் சில மாற்றங்களை செய்யவேண்டும் என்று தேர்தல் கமி‌ஷன் கருதுகிறது. இதைத்தொடர்ந்து விரைவில் தேர்தல் கமி‌ஷன் மத்திய சட்ட அமைச்சகத்துக்கு ஒரு சிபாரிசை அனுப்பி வைக்க முடிவு செய்து உள்ளது.

இதுபற்றி டெல்லியில் தேர்தல் அதிகாரி ஒருவர் கூறியதாவது:–

பாராளுமன்ற மற்றும் சட்டமன்ற தேர்தல்களின்போது வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுப்பது மற்றும் நூதன வழிகளில் பணத்துக்கு இணையான மதிப்புக்கு ஏற்பாடு செய்யும் வேட்பாளர்களை தகுதி நீக்கம் செய்ய தேர்தல் கமி‌ஷன் முடிவு செய்து உள்ளது.

5 ஆண்டு தடைஅதன்படி பணப்பட்டுவாடாவில் ஈடுபட்ட ஒரு வேட்பாளர் மீது வழக்கு தொடரப்பட்டு அவர் மீது கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டாலே அந்த வேட்பாளர் 5 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட முடியாதவாறு தடை விதிக்கும் வகையில் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தில் திருத்தம் செய்யவேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டு இருக்கிறது.

இதனால் கோர்ட்டின் இறுதி தீர்ப்பு வரும்வரை ஒரு வேட்பாளர் மீது நடவடிக்கை எடுக்க தேர்தல் கமி‌ஷன் காத்திருக்கவேண்டியது இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

-dailythanthi.com

TAGS: