இந்தியாவுக்குள் கடந்த 12 ஆண்டுகளில் மட்டும் 770 பில்லியன் டொலர் கருப்பு பணம் ஊடுருவியுள்ளதாக அமெரிக்க நிறுவனம் ஒன்று கணித்துள்ளது.
அமெரிக்காவில் செயல்பட்டு வரும் உலக பொருளாதாரத்தை கண்காணிக்கும் நிறுவனம் ஒன்று கருப்பு மற்றும் சட்டவிரோத பண நடமாட்டம் குறித்த அறிக்கையை வெளியிட்டுள்ளது.
இந்த அறிக்கையில் 2005 ஆம் ஆண்டு முதல் 2017 ஆண்டு வரையான காலகட்டத்தில் இந்தியாவிற்குள் 770 பில்லியன் டொலர் மதிப்பிலான கருப்பு பணம் ஊடுருவியுள்ளதாகவும், அதே காலத்தில் 165 பில்லயன் டொலர் மதிப்பிலான பணம் இந்தியாவில் இருந்து சட்டவிரோதமாக வெளியேறியுள்ளதாகவும் தகவல் வெளியிட்டுள்ளது.
2014 ஆம் ஆண்டு மட்டும் 101 பில்லியன் டொலர் மதிப்பிலான கருப்பு பணம் இந்தியாவிற்குள் ஊடுருவியதாகவும், 23 பில்லியன் டொலர் மதிப்பிலான பணம் சட்டவிரோதமாக வெளியேறியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2014ம் ஆண்டு மட்டும் வளரும் பொருளாதார நாடுகளில் சுமார் ஒரு டிரில்லியன் டொலர் மதிப்பிலான பணம் ஊடுருவியுள்ளது குறிப்பிடத்தக்கது.
-lankasri.com