விஞ்ஞானி ஐன்ஸ்டீனை விட புத்திக்கூர்மையுள்ள இந்திய வம்சாவளி சிறுமிக்கு பிரித்தானியாவில் அழைப்பு

விஞ்ஞானி ஐன்ஸ்டீனை விட அதிக புத்திக்கூர்மையுள்ளவராக இந்திய வம்சாவளி சிறுமியை பிரித்தானியா மென்சா சங்க தங்கள் சங்கத்தில் சேரும் படி அழைப்பு விடுத்துள்ளது.

இந்தியாவை சேர்ந்தவர் டாக்டர் சுராஜ்குமார் பவார். இவரது மகளான ராஜ்கவுரி(12)அல்டிரின்சம் பகுதியில் உள்ள இலக்கண பள்ளியில் படித்து வருகிறார்.

இவர் பிரித்தானியா மென்சா நடத்திய ஐக்கியூ தேர்வில் கடந்த மாதம் கலந்து கொண்டார்.

இந்த தேர்வில் ராஜ்கவுரி 162 மதிப்பெண்கள் பெற்றார். இது சார்பியல் கோட்பாட்டை கண்டுபிடித்த பிரபல இயற்பியல் விஞ்ஞானி ஆல்பிரட் ஐன்ஸ்டீன் மற்றும் பிரபல இயற்பியலாளர் ஸ்டீபன் ஹாக்கின்சை விட 2 புள்ளிகள் அதிகம்.

இந்த தேர்வில் அதிகபட்ச திறனளவு 140 மதிப்பெண்கள் என நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில் ராஜ்கவுரி கூடுதல் புள்ளிகள் பெற்றார்.

இதனால் ராஜ்கவுரியை தங்கள் சங்கத்தில் சேர பிரித்தானியா மென்சா சங்கத்தினர் அழைப்பு விடுத்துள்ளனர்.

-tamilwin.com

TAGS: