மாணவியின் உள்ளாடையை கழற்ற சொன்ன ஆசிரியைகள் பணியிடை நீக்கம்

maanaviகேரளாவில் நீட் தேர்வு எழுத சென்ற மாணவியின் உள்ளாடையை கழற்ற சொன்ன சர்ச்சைக்குரிய விவகாரத்தில் 4 ஆசிரியைகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு இந்தியாவில் உள்ள பல நகரங்களில் இரு தினங்களுக்கு முன்னர் நடைப்பெற்றது.

தேர்வு எழுத வந்த மாணவ, மாணவிகளுக்கு பல கெடுபிடிகள் விதிக்கப்பட்டன.

முழு கை சட்டை அணிந்திருந்த மாணவர்களின் சட்டையை அதிகாரிகள் வெட்டி அரை கை சட்டையாக்கினார்கள்.

அதே போல பெண்களின் உடை விடயத்திலும் கடும் கட்டுபாடுகள் விதிக்கபட்டன.

எல்லாவற்றுக்கும் மேலாக கேரளாவில் தேர்வு எழுத போன மாணவியின் உள்ளாடையை ஆசிரியைகள் கழற்ற சொன்னது பெரும் சர்ச்சையை ஏற்ப்படுத்தியது.

இந்த செயலை செய்த ஆசிரியைகள் மீது நடவடிக்கை எடுக்க பலர் வலியுறுத்தினார்கள்.

இந்நிலையில், மாணவியின் உள்ளாடையை கழற்ற சொன்ன விவகாரத்தில் தொடர்புடைய ஷிஜா, ஷபீனா, பிந்து, ஷகினா ஆகிய நான்கு ஆசிரியைகளும் ஒரு மாதத்திற்கு இடைநீக்கம் செய்யப்படுவதாக தனியார் பள்ளி நிர்வாகம் அறிவித்துள்ளது.

-lankasri.com

TAGS: