கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்தியா முழுவதும் நடைபெற்ற நீட் தேர்வினைக் கண்டித்து, தேர்வு எழுதிய தமிழ் நாட்டு மாணவர்கள் சென்னை சிபிஎஸ்இ அலுவலகம் மீது கல்வீசி தாக்குதலில் ஈடுபட்டனர்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்து முடிந்த நீட் தேர்வில் மாணவர்களைக் கையாண்ட விதம் மிகவும் வேதனைக்குறியதாக இருப்பதால் அதனை கண்டித்து சென்னை அண்ணா நகரில் உள்ள சிபிஎஸ்இ அலுவலகத்தை மாணவர்கள் முற்றுகையிட்டனர்.
நீட் தேர்வில் பங்குபெற்ற மாணவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து நடத்திய முற்றுகைப் போராட்டத்தில் தற்போது கல்வீச்சு தாக்குதல் நடைபெற்றுள்ளது. இதில் சிபிஎஸ்இ அலுவலகம் மீது மாணவர்கள் கல்வீசியுள்ளனர்.
நீட் தேர்வு அறையில் பொது சோதனை என்ற பெயரில் மாணவர்களை மோசமான முறையில் தேர்வர்கள் கையாண்டார்கள் என மாணவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். பல சர்ச்சைகள் நிறைந்த நீட் தேர்வை தமிழகத்தில் ரத்து செய்யவேண்டுமென இந்திய மாணவ சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-http://news.lankasri.com