யூன் மாதம் முதல் ஜல்லிக்கட்டு நடத்த தமிழக அரசு தடை விதித்துள்ளது.
தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த கூடாது என உச்சநீதிமன்றம் தடை விதித்ததையடுத்து, கடந்த 2 ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு நடைபெறவில்லை.
இந்நிலையில், இந்த ஆண்டின் ஜனவரி மாதத்தில் தமிழகத்தில் நடைபெற்று வந்த தொடர் போராட்டத்தின் காரணமாக தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி அளிக்கப்பட்டது.
இதன்படி, விண்ணப்பங்களை பரிசீலித்து, ஏற்கனவே ஜல்லிக்கட்டு நடந்த பகுதிகளுக்கு மட்டும், மாவட்ட ஆட்சியர்கள் அனுமதி அளித்து வருகின்றனர்.
மேலும், மாநில அரசிதழில், ஜல்லிக்கட்டு நடக்கும் இடம், நாள் குறித்த விபரம் இடம் பெற்றிருக்க வேண்டும்.
கடந்த காலங்களில் கோவில், சர்ச் விழாக்களை ஒட்டி ஆண்டு முழுவதும் ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டது. இதன்படி, அனுமதி கேட்டு, கிராம மக்கள் தொடர்ந்து விண்ணப்பித்து வருகின்றனர்.
ஆனால் ஜனவரி- மே வரை மட்டுமே ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்க வேண்டுமென அரசு உத்தரவிட்டு உள்ளது. இதனால் கிராம மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.
வருவாய் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘யூன் முதல் விவசாய பணிகள் துவங்கிவிடும் என்பதால், ஜனவரி- மே வரை மட்டுமே ஜல்லிக்கட்டுக்கு அனுமதி தரப்படும்.
மற்ற மாதங்களுக்கு விண்ணப்பம் அளித்தால் நிராகரிக்கப்படும் என்று கூறியுள்ளார்.
-lankasri.com