மாநிலத்தில் அனைத்து பள்ளிகளிலும் பெங்காலி மொழி கட்டாயம் – மேற்கு வங்காள அரசு

mamtha banarjeeமேற்கு வங்காளத்தில் அனைத்து பள்ளிகளிலும் பெங்காலி மொழி கட்டாயம் என திரிணாமுல் காங்கிரஸ் அரசு தெரிவித்து உள்ளது.

கொல்கத்தா, மேற்கு வங்காள மாநிலத்தில் அம்மாநில பள்ளி கல்வித்துறையின் கீழ் செயல்படும் பள்ளிகள் மற்றும் பிற கல்வி வாரியங்கள் கீழ் செயல்படும் அனைத்து பள்ளிகளிலும் பெங்காலி மொழியை கட்டாயமாக்க திரிணாமுல் காங்கிரஸ் அரசு முடிவு எடுத்து உள்ளது. திரிணாமுல் காங்கிரஸ் அரசின் இந்த முடிவானது மாநிலத்தில் நேர்மறையானது பதிலை பெற்று உள்ளது. மாநிலத்தில் செயல்படும் ஆங்கில வழி தனியார் பள்ளிகள் உள்பட அனைத்து பள்ளிகளிலும் பெங்காலி மொழியை கட்டாயமாக்கி உள்ளது.

நேற்று மாலை செய்தியாளர்களை அழைத்த அம்மாநில கல்வித்துறை மந்திரி பார்தா சட்டர்ஜி இந்த அறிவிப்பினை வெளியிட்டு உள்ளார்.

“இப்போது இருந்து, அனைத்து பள்ளிகளிலும் பெங்காலி மொழியை கற்பிக்க வேண்டும் என்பது கட்டாயம் ஆக்கப்படுகிறது. ஆங்கில வழி பள்ளிகள் பெங்காலியை தேர்வு பாடமாக்க வேண்டும். ஒன்றாம் வகுப்பு முதல் அனைத்து மாணவர்களும் பெங்காலி மொழியை இரண்டாவது அல்லது மூன்றாவது மொழியாக கட்டாயமாக படிக்கவேண்டும்” என சட்டர்ஜி குறிப்பிட்டு உள்ளார். மேற்கு வங்காள அரசின் இத்திட்டத்தை அம்மாநிலத்தவர்கள் சமூக வலைதளங்களில் பாராட்டி வருகிறார்கள். மாநில பள்ளிகளில் பெங்காலியை கற்பிக்க வேண்டும் என்ற ஷரத்து இருந்தாலும், கட்டாயம் ஆக்கப்படவில்லை, இப்போது அறிவிக்கப்பட்டு உள்ளது.

கேரளாவில் இடதுசாரிகள் அரசு அனைத்து பள்ளிகளிலும் கேரள மொழியை கட்டாயம் ஆக்கிய நிலையில் மேற்கு வங்காளத்தில் மம்தா அரசு பெங்காலி மொழியை கட்டாயம் ஆக்கிஉள்ளது.

-dailythanthi.com

TAGS: