காஷ்மீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணப்படும் உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் உறுதி

Kashmir-Mapகாஷ்மீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணப்படும் என்று உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் உறுதிபட கூறினார்.

காங்டாக்,

காஷ்மீர் மாநிலத்தில் ஹிஸ்புல் முஜாகிதீன் இயக்க தளபதி புர்கான் வானி கடந்த ஆண்டு சுட்டுக்கொல்லப்பட்டதை தொடர்ந்து, அங்கு வன்முறை சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. கடந்த ஆண்டில் மட்டும் வன்முறை சம்பவங்களில் 80 பேர் உயிர் இழந்தனர்.

மாநிலத்தில் அமைதியை ஏற்படுத்த பாதுகாப்பு படையினர் தீவிர முயற்சிகளை மேற்கொண்ட போதிலும், பாதுகாப்பு படையினர் மீது இளைஞர்களும், மாணவர்களும் கல்வீசி தாக்குவது போன்ற வன்முறை சம்பவங்கள் நீடிக்கின்றன.

ராஜ்நாத் சிங்இந்தநிலையில், இமயமலையையொட்டி சீனாவை எல்லையாக கொண்டு அமைந்துள்ள மாநிலங்களின் பாதுகாப்பு தொடர்பான 3 நாள் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக சிக்கிம் மாநிலத்துக்கு சென்ற மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங், அங்குள்ள பெல்லிங் என்ற இடத்தில் நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.

அந்த நிகழ்ச்சியில் அவர் பேசுகையில் கூறியதாவது:–

நிரந்தர தீர்வுபிரதமர் மோடி தலைமையிலான பாரதீய ஜனதா கூட்டணி அரசு எல்லா நாடுகளுடனும் நல்லுறவு வைத்துக்கொள்ளவே விரும்புகிறது. அதனால்தான், 2014–ம் ஆண்டில் பிரதமர் மோடியின் பதவி ஏற்பு விழாவுக்கு பாகிஸ்தான் உள்ளிட்ட அனைத்து அண்டை நாடுகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால் இந்தியாவுடனான பாகிஸ்தானின் அணுகுமுறையில் எந்த மாற்றமும் இல்லை. காஷ்மீரில் குழப்பத்தை ஏற்படுத்தி இந்தியாவை சீர்குலைக்க விரும்புகிறது.

காஷ்மீர் இந்தியாவின் ஓர் அங்கம். காஷ்மீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண்பதிலும், அங்கு முழு அமைதியை ஏற்படுத்துவதிலும் மத்திய அரசு உறுதியாக இருக்கிறது.

உலகமயமாக்கல்பாகிஸ்தான் இனிமேலாவது தனது போக்கை மாற்றிக்கொள்ள வேண்டும். அப்படி மாற்றிக்கொள்ளாவிட்டால் நாம் மாற்ற வைப்போம். உலகமயமாக்கல் வந்துவிட்ட பிறகு ஒரு நாட்டை மற்றொரு நாடு சீர்குலைக்க முடியாது. அப்படி சீர்குலைக்க முயன்றால் அந்த நாட்டை சர்வதேச சமுதாயம் புறக்கணித்து விடும்.

-dailythanthi.com

TAGS: