படித்த பள்ளி இடிந்தது… நிதி கேட்டு வந்த ஆசிரியருக்கு தண்ணீர் கூட கொடுக்காமல் விரட்டிய ரஜினியின் குடும்பம்!?

rajiniரஜினிகாந்தின் நடிப்பால் மயங்காதவர்கள் யாரும் இருக்க முடியாது. அதற்கு ஈடாக அவருக்கு சம்பளம் மக்களால் கொடுக்கப்படுகிறது. அதை விட அதிகமாக என்று கூட சொல்லலாம்.

ஆனால் மக்களுக்கு அவர் திரும்பி என்ன செய்தார் என்றால் பூஜியம் தான் விடையாக வருகிறது.

சென்னை வெள்ளத்திற்கு ஊர் பேர் தெரியாத தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் 25 லட்சம் கொடுத்த போது, ரஜினி 10 லட்சம் கொடுத்தார். சரி தமிழர்களுக்கு மட்டும் தான் அவர் உதவ மாட்டார். அவரது சொந்த மாநில மக்களுக்காவது உதவுவாரா என்றால் அதுவும் இல்லை என்கிறார்கள்.

பெங்களூரு அருகே உள்ள கேவிபுரத்தில் (Gavipuram) ஒரு பள்ளிக் கூடம் உள்ளது. கடந்த 1954 முதல் 1959 வரை இந்த பள்ளிக் கூடத்தில் தான் ஒன்றாம் வகுப்பு முதல் 5ஆம் வகுப்பு வரை ரஜினி படித்துள்ளார்.

கடந்த சில வருடங்களுக்கு முன்பு இந்த பள்ளிக்கூடம் பாதி இடிந்து, மீதி தொங்கிங்கொண்டிருந்ததாம். ரஜினி படித்த பள்ளி இடிந்தது என்ற செய்தி ரஜினியின் காதை எட்டியதோடு, நாடுமுழுவதும் பேசப்பட்டதால், ரூ. 25 லட்சம் நிதி தருவதாக ரஜினி தரப்பில் இருந்து சொல்லப்பட்டதாம்.

இதனையடுத்து அப்பகுதி மக்களும், ரஜினிக்கு பாடம் சொல்லிக் கொடுத்த ஓய்வு பெற்ற ஆசிரியர்களும், கட்டட நிதி வேண்டி போயஸ் கார்டனில் உள்ள ரஜினியில் வீட்டிற்கு நடையாய் நடைந்துள்ளனர்.

செருப்பு தேய்ந்தது தான் மிச்சமாம். வீட்டிற்கு உள்ளே அவர்களை விட மறுத்த ரஜினியின் குடும்பத்தினர் , அவர்களின் தாகத்திற்கு பச்சை தண்ணீர் கூட கொடுக்கவில்லையாம். ஏமாற்றத்துடன் திரும்பியுள்ளனர் சொந்த ஊர் மக்களும், ஆசிரியர்களும்…

கட்டட நிதிக்கு 1 கோடியே 50 லட்சம் என மதிப்பிடப்பட்ட நிலையில், அரசு மற்றும் எம்.பி., எம்.எல்.ஏக்கள் என மொத்தம் 1 கோடியே 26 லட்சத்து 50 ஆயிரம் கொடுக்க முன்வந்தார்களாம்.

எங்கள் தலைவர் படித்த பள்ளி என்பதால், மீதி பணத்தை நாங்களே திரட்டித் தருகிறோம் என வாக்குறுதி அளித்தார்களாம், ஏழை, அப்பாவி ரஜினி ரசிர்கள்.

-www.manithan.com