ராஜீவ் கொலை வழக்கில் சர்ச்சைக்குள்ளான சாமியார் சந்திரசாமி காலமானார்

chandraswamiமுன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சர்ச்சைக்குள்ளான சாமியார் சந்திரசாமி காலமானார்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சர்ச்சைக்குள்ளான சாமியார் சந்திரசாமி தமது 66 வது வயதில் மாரடைப்பு காரணமாக காலமாகியுள்ளார்.

ராஜீவ் கொலை வழக்கை விசாரித்த ஜெயின் கமிஷன், சந்திரசாமியிடம் விசாரிக்க பரிந்துரைத்து உத்தரவிட்டிருந்தது. இவரும் பாஜகவை சேர்ந்த தற்போதைய ராஜ்யசபா எம்.பியுமான சுப்பிரமணியன்சாமியும் நண்பர்கள் என கூறப்படுவதுண்டு.

கடந்த சில ஆண்டுகளாக வெளி உலக தொடர்புகள் ஏதுமின்றி, ஊடகங்களின் கண்களுக்கு சிக்காமல் வாழ்ந்து வந்த சந்திரசாமி, மாரடைப்பு காரணமாக இன்று காலமானார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

சந்திராசாமி வெறும் ஜோசியம் கூறும் சாமியார் என்றும், தாந்த்ரீக வேலைகள் செய்பவர் என்றும்தான் முதலில் அவர் குறித்த அடையாளங்கள் இருந்தன.

ஆனால் அவர் அகில உலக அளவில், நேரிடையாகவும், மறைமுகமாகவும் ஆயுத பேர, வியாபாரங்களில் ஈடுபட்ட மிகப்பெரிய புள்ளிகளான அட்னன் கஷொகி என்பவருடன் நெருங்கிய வியாபார தொடர்புகளை ஏற்படுத்தியிருந்தவர்.

மற்றொரு ஆயுத தரகர் என்ரி மில்லருடனும் இவருக்கு தொடர்புகள் இருந்ததாக கூறப்படுவதுண்டு. பிறப்பால் சமணரானாலும், சந்திரசாமி, தாந்த்ரீகங்களில் ஈடுபட்டார். முன்னாள் பிரதமர் நரசிம்மராவுக்கு மிக நெருக்கமானவர். அவருக்கு ஆன்மீக குருவாக இவர்தான் விளங்கினார்.

-lankasri.com

TAGS: