இறைச்சிக்காக மாடுகளை விற்க மத்திய அரசு தடை விதித்திருந்த நிலையில், இந்த சட்டத்துக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை அதிரடி தடை விதித்துள்ளது.
இந்தியா முழுவதும் இறைச்சிக்காக மாடுகளை விற்க மத்திய அரசு தடை விதித்திருந்தது.
இதற்கு எதிராக கேரளா, கர்நாடகா உட்பட பல மாநிலங்களில் மக்கள், அரசியல் கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
மாட்டுக்கறியை சமைத்து சாப்பிட்டு தங்களது எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர்.
தடையை எதிர்த்து செல்வகோமதி, ஆஷிக் இலாகி பாவா ஆகியோர் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடர்ந்தனர்.
அதில், அவரவர் சாப்பிடும் உணவைத் தெரிவு செய்து கொள்வது ஒவ்வொருவரின் தனிப்பட்ட உரிமை, அதில் அரசு தலையிட முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கை இன்று விசாரித்த நீதிமன்றம், மத்திய அரசின் உத்தரவை அமல்படுத்த நான்கு வாரங்களுக்கு இடைக்காலத் தடை விதித்ததோடு, இது தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் நான்கு வாரத்துக்குள் பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.
-lankasri.com