திருமுருகன் காந்தி கைது செய்யப்பட்டதற்கு நேற்று இயக்குனர் இமயம் பாரதிராஜா தலைமையில் கண்டன கூட்டம் நடைபெற்றது.
இதில் கௌதமன், வெற்றிமாறன், ராம், அமீர் உள்ளிட்டோர் கலந்து தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினார்.
இந்நிலையில் இயக்குனர் கௌதமன் உள்பட பத்து பேரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய தமிழக அரசு திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதுதொடர்பாக இயக்குனர் கௌதமன் இன்று வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில்,
“ஒரு வருடம் அல்ல ஆயிரம் வருடம் வேண்டுமானாலும் எங்களை சிறையில் அடையுங்கள், ஆனால் நாங்கள் என்ன தவறு செய்தோம், எங்கள் இனத்திற்காக போராடியது தவறா?” ” 50,000 வருட வரலாறு கொண்ட எங்கள் இன உரிமைக்காக போராடிய எங்களை குண்டர் சட்டத்தில் கைது செய்வது அநியாயம்”.
அறவழியில் போராடிய எங்களையும் எங்கள் சக தோழர்களான தமிழ் இளைஞர் கட்சி ஒருங்கிணைப்பாளர் பிரபாகரன் மற்றும் தோழர் செம்பியன் போன்றவர்களையும் சிறையில் அடைக்க சூழ்ச்சி நடைபெற்று வருகிறது.
“நீங்கள் எங்கள் மேல் எந்த அடக்குமுறை செய்தலும், தூக்கில் இட்டாலும், எங்கள் இனம் எழுந்து போராடும்” என்று கௌதமன் கூறினார். மேலும் அவர் “எங்கள் தமிழ் இளைஞர்கள் எங்கள் இனத்திற்கான உரிமை மீட்பு போராட்டத்தை கடைபிடிப்பார்கள். அதுவரை அவர்கள் ஓயமாட்டார்கள்” என்று கூறினார்.
தஞ்சையில் விளைந்தால் தரணிக்கே சோறு போடலாம் என்ற நிலைமை போய் இன்று ஒரு வேலை கஞ்சிக்கு போராடுகின்றனர் தமிழ் விவசாயிகள்.
ஐநூறு விவசாயிகள் தங்கள் உழுது விவசாயம் செய்த அதே நிலத்தில் நெஞ்சு அடைத்து தற்கொலை செய்துகொண்டனர், எங்கள் விவசாயிகள் எந்த மரத்தின் அடியில் படுத்து ஓய்வு எடுத்தார்களோ அதே மரத்தின் கிளையில் தூக்கு இட்டு இறந்தார்கள்.
இது எங்கள் இனத்தின் மேல் காட்டப்படும் அதிகார அடக்குமுறை. இதை அவலங்களை எல்லாம் முன்னிறுத்தி டெல்லியில் போராடிய எங்கள் தமிழ் விவசாயிகளை சந்திக்க மறுத்து துரோகம் செய்தது அதிகார வர்க்கம். இன்னும் தற்கொலை தொடரும். இன்னும் எங்களுக்கான நீதி கிடைக்கவில்லை.
கடலுக்குள் மீன் பிடித்து எடுத்து வரும் படுகுகளில் இன்று மீனவர்களை பிணமாக எடுதுவரும் அவல நிலை இருக்கிறது. 21 வயது எங்கள் தோழன் பிரிட்ஜோ துடிக்க துடிக்க கொலை செய்யப்பட்டான். மீனவர்களுக்கு தீர்வு கிடைக்கவில்லை.
எங்கள் விவசாயிகள் வியர்வை சிந்தி விதையிட்ட பயிர்கள் நீர் பாசனம் இன்றி கருகி விட்டன. காவேரி மேலாண்மை வாரியம் கடைசி வரை அமைக்க போவதில்லை என்ற முடிவில் உள்ளது மத்திய அரசு. நீதி கிடைக்கவில்லை.
ஹைட்ரோகார்பன் திட்டம் வந்தால் இந்திய பொருளாதாரம் வலுபெறும் என்று சூளுரைக்கும் மத்திய அரசு, அதனால் எங்கள் தமிழ் நாட்டு மக்கள் வாழ்வாதாரம் இழப்பார்கள் எங்கள் நில வளங்கள் சூறையாட படும் என்று நினைத்து பார்க்கவில்லை.
உங்களால்தான் போராட்ட களத்திற்கு நாங்கள் தள்ளப்பட்டோம். வேறு வழி இல்லாமல் போராட முடிவுசெய்து அறவழியில் போராடி வருகிறோம்.
“இனத்திற்கு போராடும் எங்களை சிறையில் அடைத்து என்ன செய்ய போகிறீர்கள்? உங்கள் திட்டம் என்ன? மரியாதைக்குரிய ரஜினிகாந்த் அவர்களை எங்கள் தமிழ் தேசத்தை ஆல வைக்கும் திட்டம் தான் உங்களதா?, அவர் மூலம் எங்கள் தமிழ் மண்ணை நீங்கள் ஆல நினைகிறீர்களா?“ என்று கௌதமன் கேள்வி எழுப்பினார்.
“எங்களை மிதித்து அதிகார வர்க்கம் ஆல வேண்டும் என்று நினைதல் அது ஒரு போதும் நடக்காது.” என்று அவர் கூறினார்.
மேலும் தமிழக மக்களிடம் அவர் ஒரு கேள்வியை முன்வைத்தார் “ நாங்கள் நம் இனத்திற்கான உரிமையை மீட்க எந்த விதமான போராட்டத்தை நடத்த வேண்டும் என்று நீங்கள் கூறுங்கள்? நானும் என் தம்பிகளும் களத்தில் ஒரு போர் வீரனை போல போராட தயாராக இருக்கிறோம்.” என்றார்.
“என்னை எது வேண்டுமானாலும் செயுங்கள். நான் உறுதியாக நிற்பேன், எதிர்க்க துணிந்தால் தமிழ் மீளும் – எதற்கும் துணிந்தால் தமிழ் ஆளும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-lankasri.com
தமிழனின் சுய ரூபம் கொஞ்சம் கொஞ்சமாக, சிறிது சிறிதாக வெளிப்படுவதை காண முடிகிறது. நம்மவர்களை வைத்தே நம்மை பழிவாங்குவர். அப்படிப்பட்ட புல்லுருவிகளை ஆரம்பத்திலிருந்தே களையெடுக்கவேண்டும். நாம் செய்ய pavathai தைரியமாகவும், விவேகமாகவும் செய்யவேண்டும். நமது செயலினை தீவிரமாக சிந்தித்து செய்யவேண்டும். நம்முடைய திட்டங்கள் எதிரிக்கு இறுதிவரை தெரியாமலே இருக்கவேண்டும். அவர்கள் எதிர்பாராத சமயத்தில் களத்தில் இறங்கி அவர்களை திக்குமுக்காட செய்ய வேண்டும். நன்மைக்கும் நல்லவர்களுக்கும் இறைவனின் ஆசீர் எப்பொழுதும் உண்டு.