பீகார் பிளஸ் 2 ரிசல்ட்.. 70 சதவீத மாணவர்கள் தோல்வி.. அதிர்ச்சி தகவல்

001பாட்னா: பீகார் மாநிலத்தில் 12-ஆம் வகுப்பு தேர்வு எழுதிய 76 சதவீதம் கலை பாடப்பிரிவு மாணவர்களும், 70 சதவீதம் அறிவியல் பாடப்பிரிவு மாணவர்களும் தோல்வியடைந்துள்ளனர்.

ஒரு காலத்தில் கல்வியில் சிறந்து விளங்கிய பீகார் மாநிலத்தில் தற்போது வெளியாகியுள்ள 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.

பொதுவாக, தேர்வில் மாணவர்கள் பிட் அடிப்பது என்பது அங்கொன்றும், இங்கொன்றுமாக அபூர்வமாக நடைபெறும். ஆனால் பீகாரை பொறுத்தவரை தேர்வில் பிட் அடிப்பது என்பது சர்வசாதரணமாக நடைபெறும் என்பது சமீபத்தில் வெளியான செய்திகள் மூலம் அம்பமாகியது. இந்நிலையில் பீகாரில் தேர்வு எழுதிய மொத்த மாணவர்களில் 64 சதவீத மாணவர்கள் தோல்வியைத் தழுவியுள்ளனர். அதிலும் 70 சதவீத அறிவியல் பாடப்பிரிவு மாணவர்களும், 76 சதவீதம் கலை பாடப்பிரிவு மாணவர்களும் தோல்வியடைந்துள்ளனர்.

பொதுவாக, தேர்வில் மாணவர்கள் பிட் அடிப்பது என்பது அங்கொன்றும், இங்கொன்றுமாக அபூர்வமாக நடைபெறும். ஆனால் பீகாரை பொறுத்தவரை தேர்வில் பிட் அடிப்பது என்பது சர்வசாதரணமாக நடைபெறும் என்பது சமீபத்தில் வெளியான செய்திகள் மூலம் அம்பமாகியது.

இந்நிலையில் பீகாரில் தேர்வு எழுதிய மொத்த மாணவர்களில் 64 சதவீத மாணவர்கள் தோல்வியைத் தழுவியுள்ளனர். அதிலும் 70 சதவீத அறிவியல் பாடப்பிரிவு மாணவர்களும், 76 சதவீதம் கலை பாடப்பிரிவு மாணவர்களும் தோல்வியடைந்துள்ளனர்.

மொத்தம் 30.11 சதவீதம் அறிவியல் மாணவர்களே தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் சராசரியாக 44.66 மதிப்பெண்களை மட்டுமே பெற்றுள்ளனர். ஆனால் காமர்ஸ் பாடத்தில் 73.76 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

கடந்த வருடம் இப்படியான கடும் நடவடிக்கைகள் ஏதும் இல்லாத போது 67.06 சதவித அறிவியல் மாணவர்களும், 80.87 சதவித கலை மாணவர்களும் தேர்ச்சி பெற்றிருந்தனர்.

கடந்த கல்வி ஆண்டில் நடந்த 12-ம் வகுப்பு தேர்வில் மாவட்ட அளவில் முதலிடம் பிடித்த ரூபி ராய் முறைகேட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து ரூபிராயையும், இதில் தொடர்புடைய மேலும் சிலரையும் சிறப்பு புலனாய்வு அதிகாரிகள் கைது செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

tamil.oneindia.com

TAGS: