இறைச்சிக்காக மாடு, கன்றுக்குட்டி, எருமை உள்ளிட்ட கால்நடைகளை விற்பனை செய்வதற்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. இந்த தடைக்கு இந்தியா முழுவதும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. சென்னையில் கூட மாட்டிறைச்சி விருந்துக்கு ஏற்பாடு செய்த ஐஐடி மாணவர் மீது தாக்குதல் நடைபெற்றது.
இந்நிலையில் நடிகர் அரவிந்த் சாமி இந்த சர்ச்சை பற்றி கருத்து தெரிவித்துள்ளார். “இந்தியாவில் அதிக அளவில் குழந்தைகள் ஊட்டச்சத்தின்மையால் பாதிக்கப்பட்டுள்ளனர். உலக பசி குறியீட்டில் இந்தியா 67வது இடத்தில் உள்ளது. இருந்தும், மக்களின் உணவை பறிக்க காரணம் தேடிக்கொண்டிருகிறது அரசு. அதே அக்கறையை மக்களுக்கு உணவளிப்பதில் காட்டவேண்டும், அதை தான் அனைத்து மதங்களும் கூறுகின்றன,” என கூறியுள்ளார்.
-cineulagam.com


























அப்படி போடுங்க சார் …. இனிமேலேயாவது சத்துணவு சாப்பாடுக்கு யோசிக்கட்டும் ….