உலக நாடுகளில் காலநிலை மாற்றமானது வெகுவாக மாறி வருகின்றது.
இதன் காரணமாக வெப்பநிலை அதிகரிப்பு ஏற்பட்டு தண்ணீர்ப் பஞ்சம் தலைவிரித்தாடுகின்றது.
இதனைக் கருத்திற்கொண்டு வல்லரசு நாடுகள் இணைந்து பாரிஸ் உடன்படிக்கை ஒன்றினை ஏற்படுத்தியுள்ளன.
இதற்கு அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியான டொனால்ட் ட்ரம்ப்பும் ஆதரவு தெரிவித்துள்ளார். சூழல் வெப்பநிலை அதிகரிப்பில் வாகன பாவனை அதிகரிப்பும் முக்கிய பங்கு வகிக்கின்றது.
அதிலும் எரிபொருளில் இயங்கும் வாகனங்களால் பாதிப்பு அதிகமாகும்.
இதனைக் கருத்திற்கொண்டு இந்தியாவும் 2030 ஆம் ஆண்டிலிருந்து எரிபொருளில் இயங்கும் கார்களை உற்பத்தி செய்வதை முற்றாக நிறுத்தவுள்ளது.
முற்று முழுதாக மின்சாரத்தில் இயங்கும் இலத்திரனியல் கார்களை மட்டுமே உற்பத்தி செய்யவுள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும் இத் தொழில்நுட்பம் எரிபொருளை விடவும் செலவு குறைவாக இருக்கும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
-lankasri.com