மும்பை: மக்கள் அனைவரையும் சைவமாக மற்ற பா.ஜ., முயற்சிப்பதாக வரும் கருத்துக்கள் முட்டாள்தனமானது என மத்திய அமைச்சர் வெங்கைய நாயுடு கூறியுள்ளார்.
கால்நடைகள் விற்பனை தொடர்பாக மத்திய அரசு அறிவித்துள்ள சட்டம் நாடு முழுவதும் பெரும் விவாத பொருளாக மாறியுள்ளது. இந்த சட்டத்திற்கு பலர் எதிர்ப்பு தெரிவித்தும், பலர் ஆதரவு தெரிவித்தும் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.
இது குறித்து மத்திய அமைச்சர் வெங்கைய நாயுடு கருத்து தெரிவித்துள்ளார். பி.டி.ஐ., நிறுவனத்திற்கு அவர் அளித்த பேட்டியில் :‛‛ பா.ஜ., அரசு அனைவரையும் சைவமாக மாற்ற முயற்சித்து வருவதாக கருத்து பரவலாக பரவி வருகிறது. டி.வி., விவாத நிகழ்ச்சிகளிலும் இது குறித்து பேசப்பட்டு வருகிறது.
பா.ஜ.,வில் சில மூத்த தலைவர்கள் சைவ உணவை கடை பிடித்து வருகின்றனர். ஆனால் அசைவம் சாப்பிடுபவர்களும் இருக்கின்றனர். நான் கூட அசைவம் சாப்பிடுபவன்தான். நான் அக்கட்சியின் மாநில தலைமை பொறுப்பில் இருக்கிறேன். உணவு என்பது அவரவர் விரும்பம் சார்ந்தது. அவர்களுக்கான உணவை அவர்கள் தான் முடிவ செய்ய வேண்டும். பா.ஜ., அரசு அனைவரையும் சைவமாக முயற்சிப்பதாக வெளியாகி வரும் கருத்து முட்டாள் தனமானது ” என தெரிவித்துள்ளார்.
-dinamalar.com