விவசாய கடன் தள்ளுபடி செய்தால் பொருளாதாரம் சீர்குலையும்: உர்ஜித் படேல்

ujithமும்பை: விவசாய கடன்களை தள்ளுபடி செய்தால் பொருளாதாரம் சீர்குலைந்து விடும் என ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் பட்டேல் எச்சரித்துள்ளார்.

மும்பையில் ரிசர்வ் வங்கி சார்பில் நாணயக் கொள்கை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் ரெப்போ வட்டி விகிதத்தை 6.25 சதவீதமாகவே நீட்டிக்க முடிவு செய்யப்பட்டது.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் பட்டேல் : ‛‛ கடந்த ஆண்டு நவம்பர் முதல் பல்வேறு காரணங்களால் பணவீக்கம் குறைந்தே காணப்படுகிறது. செல்லாத நோட்டு அறிவிப்பிற்கு முன்னரே பொருளாதார வளர்ச்சி குறைந்து விட்டது. விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்வது, நிதிச்சரிவை ஏற்படுத்தி, பொருளாதாரத்தை சீர்குலைத்து விடும். மத்திய, மாநில அரசுகள் கவனமாக இருக்க வேண்டும்.” என எச்சரித்துள்ளார்.

-dinamalar.com

TAGS: