தூத்துக்குடி வடக்கு மாவட்டம் கோவில்பட்டியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக வந்த நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் பேசுகையில் கட்சி ஆரம்பிக்கமால் இருப்பவர் முதல்வராக வருவாரா என கருத்து கணிப்பு நடத்துவது எவ்வாறு என்று தெரியவில்லை, தமிழகத்தில் ஹிந்தியை அதிக மக்கள் விரும்புவது போன்று கருத்து கணிப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. ஹிந்தியை வேலைக்காக படிக்க வேண்டும் என்று கூறுகின்றனர். ஆனால் ஹிந்தியை தாய்மொழியாக கொண்ட மாநிலங்களில் வேலையில்லா திட்டம் உள்ளது.
ரஜினிகாந்த் மற்றும் ஹிந்தி மொழியை பெரும்பாலன மக்கள் ஏற்றுக்கொள்வது போன்ற பிம்பத்தினை தமிழகத்தில் உருவாக்க மத்தியரசு முயன்று வருகிறது. ரஜினிகாந்த் போர் கலத்திற்கு வரும் போது சந்திப்போம், தமிழகத்தில் நடைபெற்று வருவது அ.தி.மு.க அரசு இல்லை, பி.ஜே.பி அரசு, மறைந்து முதல்வர் ஜெயலலிதா எதிர்த்த முக்கிய திட்டங்கள் தற்போது நிறைவேற்றபட்டுள்ளது. 2019 வரை தமிகழத்தில் அ.தி.மு.க ஆட்சி நீடிக்கும், நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டமன்ற தேர்தலை நடத்துவது பி.ஜே.பி திட்டம், மேலும் ரஜினிகாந்தினை தனி கட்சியை ஆரம்பிக்க வைத்து, அவருடன் கூட்டணி சேர பி.ஜே.பி திட்டம் வகுத்துள்ளது.
மலேசியா சென்ற ம.தி.மு.க பொது செயலாளர் வைகோவினை அந்த அரசு தடுத்து நிறுத்தியதற்கு இலங்கை அரசு மட்டுமல்ல, இந்திய அரசும் ஒரு காரணமாக இருக்கலாம் என்பது என சந்தேகம், எனக்கு இது போன்ற அனுபவங்கள் உண்டு, வைகோவிற்கு நிகழ்ந்த சம்பவம், தனி மனித சம்பவம் அல்ல தமிழ் இனத்திற்கான அவமானம், தமிழகத்தில் மீத்தேன், ஹைட்ரோகார்பன் மற்றும் அணு உலை திட்டங்களுக்கு இடம் இருக்கும் போது எய்ம்ஸ் மருத்துவமனை அமைய இடம் இல்லை என்பது வேடிக்கையான செய்தி, அவ்வாறு எய்ம்ஸ் அமைந்தாலும் தமிழக மாணவர்களை விட வட இந்தியர்கள் தான் அதிக லாபம் அடையவார்கள், நீட் தேர்வு என்பது மூலமாக நம்மிடமிருந்த 50 சதவீதம் பறிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
-nakkheeran.in
முதிர்சிப்பெற்ற கருத்துக்கள்
நாம்தமிழர்கள்!