‘விவசாய கடன் தள்ளுபடி நிவாரணம்தான்; தீர்வாகாது’

இந்தியாவில் நிலவும் விவசாயப் பிரச்சனைகள் குறித்தும்,இந்திய விவசாயி எதனால் கோபமாக இருக்கிறார் என்பது குறித்தும் மூத்த பத்திரிக்கையாளரான சாய்நாத் தான் நடத்திய யு டியூப் நேரலையில் எடுத்துரைத்தார்.

இன்று ஞாயிற்றுக்கிழமை இந்திய விவசாயிகளுக்கு உள்ள பிரச்னை செயல்பாடு குறித்து சமூகவலைத்தளமான யு டியூப்பில் நடத்திய நேரலையில் சாய்நாத் உரையாடினார்.

நேரலையில் பேசிய சாய்நாத் கூறுகையில், ”அரசின் விவசாயிகள் கடன் தள்ளுபடி திட்டம் விவசாயிகளுக்கு நிவாரணம்தான்; அதுவே தீர்வாகாது” என்று தெரிவித்தார்.

किसान
படத்தின் காப்புரிமைGETTY IMAGES

”பன்னாட்டு நிறுவனங்களுக்கு வழங்கப்படும் வரிசலுகையை ஒப்பிடுகையில் விவசாயிகளுக்கு அளிக்கப்படும் விவசாயக் கடன் தள்ளுபடியின் அளவு மிகவும் குறைவு” என்று சாய்நாத் தெரிவித்தார்.

தமிழக விவசாயிகள் நடத்திய போராட்டம்

மேலும், அவர் கூறுகையில், டெல்லி ஜந்தர்மந்தரில் தமிழக விவசாயிகள் நடத்திய போராட்டம், மத்திய பிரதேசத்தில் அண்மையில் நடந்த விவசாயிகளின் போராட்டம் மற்றும் நாட்டில் ஆங்காங்கு நடைபெறும் விவசாயிகளின் போராட்டங்கள் நாட்டில் விவசாயிகள் சந்திக்கும் பிரச்சனைகள் குறித்த அறிகுறிதான் என்று தெரிவித்த சாய்நாத், ஆனால், இப்போராட்டங்கள் நாட்டில் விவசாயிகள் சந்திக்கும் அனைத்து இன்னல்களையும் வெளிக்கொணரவில்லை என்று குறிப்பிட்டார்.

டெல்லியில் போராட்டம் நடத்திய தமிழக விவசாயிகள்

கால்நடை விற்பனை தொடர்பாக மத்திய அரசு கொண்டு கட்டுப்பாடுகள் குறித்து சாய்நாத் கூறுகையில், ”மத்திய அரசின் கால்நடை விற்பனை கட்டுப்பாடுகள் விவசாயிகளை மிகவும் பாதித்துள்ளது. இவை கிராமப்புற இந்தியாவின் முதுகெலும்பையே உடைப்பதாக உள்ளது” என்று கூறினார்.

விவசாயிகளின் தற்கொலை குறித்து அரசு வெளியிடும் தரவுகள் உண்மைநிலையை எடுத்துக்கூறுவதாக இல்லை என்று தெரிவித்த சாய்நாத், விவசாய குடும்பங்களின் சராசரி வருமானம் மிகவும் குறைவாக இருப்பதாக குறிப்பிட்டார். -BBC

TAGS: