திருமண நிதியுதவித் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் உள்ள முகாம்களில் வசிக்கும் ஈழத்து பெண்களுக்கும் 8 கிராம் தங்கம் வழங்கப்படும் என சமூகநலத்துறை அமைச்சர் வி.சரோஜா அறிவித்துள்ளார்.
மூவலூர் ராமாமிர்தம் அம்மை யார் நினைவு திருமண நிதியுதவித் திட்டத்தின் கீழ் திருமண உதவித் தொகையுடன் திருமாங்கல்யம் செய்ய 4 கிராம் (22 காரட்) தங்க நாணயம் வழங்கும் திட்டத்தை 2011-2012-ம் ஆண்டு முதல் தமிழ்நாட்டில் உள்ள தகுதியான முகாம் வாழ் ஈழத்து தமிழ் பெண்களுக்கும் விரிவுபடுத்தி அரசாணை வெளியிடப்பட்டது.
தற்போது, இத்திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டு வரும் திருமண நிதி உதவித் தொகையுடன் சேர்த்து திருமாங்கல்யம் செய்திட 8 கிராம் (22 காரட்) தங்க நாணயம் வழங்கிட உத்தரவிடப்பட்டுள்ளது.
அதன் படி, தமிழ்நாட்டில் உள்ள தகுதியான முகாகளில் வசிக்கும் ஈழத்து தமிழ் பெண்கள் பயன்பெறும் வகையில் இத்திட்டம் விரிவுபடுத்தப்படும்.
54 ஆயிரத்து 439 அங்கான்வாடி மையங்களுக்கு ரூ.1 கோடியே 40 லட்சத்தில் சுகாதாரப் பைகள் வழங்கப்படும். மகளிர் நலனுக்கென தொழில்நுட்ப வசதி யுடன்கூடிய சமுதாய உதவி மையம் ரூ.1 கோடியில் அமைக்கப்படும்.
குழந்தை பராமரிப்பு நிறுவனங்களில் உள்ள குழந்தை களை ஆக்கப்பூர்வமான குடிமக்க ளாக்க உளவியல் வாழ்வரங்கம் உருவாக்கப்படும். 19 ஆயிரத்து 230 சத்துணவு மையங்களுக்கு பிரஷர் குக்கர் மற்றும் 12 ஆயிரம் மையங்களுக்கு புதிய சமையல் உபகரணங்கள் ரூ.10 கோடியே 80 லட்சத்தில் வழங்கப்படும் என்று சமூகநலத் துறை அமைச்சர் வி.சரோஜா அறிவித்துள்ளார்.
-lankasri.com