கலப்பட பால் நிறுவனங்கள் மீது நடவடிக்கை: அமைச்சர் கைவிரிப்பு

001சென்னை: கலப்பட பால் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் என்னிடம் இல்லை என பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளார்.
சென்னையில் ஆவின் ரசகுல்லா அறிமுகம் செய்யப்பட்டது. சென்னை நந்தனத்தில் நடந்த நிகழ்ச்சியில் இதனை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அறிமுகம் செய்தார்.
பின்னர் அவர் அளித்த பேட்டி: ஆவின் பால் மற்றும் தயிரில் ரசாயன பொருள்கள் கிடையாது. தனியார் நிறுவனம் நடத்திய ஆய்வில், இது தெரியவந்துள்ளது. அனைத்து தனியார் பாலிலும் கலப்படம் என நான் கூறவில்லை. தனியார் பால் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க என்னிடம் அதிகாரம் இல்லை. எனது நிலைப்பாட்டில், நான் எப்போதும் பின் வாங்கியதில்லை.

பால் முகவர் சங்கத்தில் ஒருவரை தவிர வேறு யாரும் எதிர்க்கவில்லை. ஆவின் பால் விற்பனை அதிகரித்தால், அதில் எனக்கு கமிஷன் ஏதும் கிடைக்காது. லாபம் தமிழக அரசுக்கு தான் செல்லும். கலப்பட பால் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கும் அதிகாரிகளிடம், அறிக்கை அளி்கப்பட்டுள்ளது. கலப்பட பால் விற்போர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இதனை பொறுத்திருந்து பாருங்கள். இவ்வாறு அவர் கூறினார்.

-dinamalar.com

TAGS: