அன்று முன்னாள் ரவுடி.. இன்று ரியல் ஹீரோ!

ஒருகாலத்தில் ரவுடியாக வலம் வந்து கொண்டிருந்த ராஜாவை சிஎன்என்- ஐபிஎன் “ரியல் ஹீரோ” விருது வழங்கி கௌரவித்துள்ளது.

NDTV இந்தாண்டுக்கான சிறந்த மனிதர் விருதை வழங்கியுள்ளது. அப்படி என்ன சாதித்துவிட்டார் இந்த ராஜா என்று கேட்பவர்களுக்கான பதில் இதோ,

தமிழ்நாட்டின் வாணியம்பாடியை சேர்ந்தவர் ராஜா, பிழைப்புக்காக இவரது குடும்பம் பெங்களூரில் குடியேறியது.

சிறுவயதிலேயே தவறான நண்பர்களின் வழிகாட்டுதலால் திருடுவது, பிக்பாக்கெட் அடிப்பது என கெட்ட பழக்கங்களில் மூழ்கினார்.

பெற்றோர்களின் பேச்சையும் மதிக்காமல் வீட்டைவிட்டு வெளியேறி சென்னை வந்தடைந்தார்.

சென்னையில் தெருவோரங்களில் வசித்த ராஜா திருட்டு தொழிலை கைவிடவில்லை, இப்படியே இரண்டு ஆண்டுகள் கழிந்தது.

இந்நிலையில் பொலிஸ் ராஜாவை கைது செய்து சிறுவர் சீர்திருத்த பள்ளியில் சேர்த்தனர்.

கஷ்டங்கள் என்ன என்பதை உணர்ந்த ராஜா, திருந்தி வாழ முடிவு செய்தார்.

20 நாட்கள் கழித்து பெற்றோர் ராஜாவை ஜாமீனில் விடுவித்து பெங்களூர் அழைத்து சென்றனர்.

அவருக்கு திருமணம் செய்து வைத்ததுடன், ஆட்டோ ஒன்றை வாங்கி கொடுத்தனர்.

மனதில் உறுதியுடன் நல்வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருந்த ஆட்டோ ராஜாவின் வாழ்வில் புயல் வீசியது.

அன்றைய தினம், முதியவர் ஒருவர் சாலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்ததை பார்த்தார்.

அவரை பார்த்த நிமிடம் மனதில் எண்ணற்ற மாற்றங்கள், முதியவருக்கு உதவினார், அன்றைய தினம் முடிவெடுத்தது தான் சாலையில் அனாதையாய் கேட்பாரற்று இருக்கும் முதியவர்கள், மனநலம் குன்றியவர்களை தன் வீட்டுக்கு அழைத்து வந்து பார்க்கத் தொடங்கினார்.

1997ம் ஆண்டு New Ark Mission என்ற அமைப்பை தொடங்கி சேவையாற்றி வருகிறார்.

இவரின் எண்ணம் அறிந்து பலரும் உதவி செய்யத் தொடங்கினர், கர்நாடக அரசும் ஒரு ஏக்கர் நிலம் வழங்கியது, அதில் காப்பகம் அமைத்து 750 பேரை பராமரித்து வருகிறார்.

இவரது மனைவியும், பிள்ளைகளும் கூட சேவையாற்றி வருகின்றனர், வெகு சீக்கிரமே தமிழகத்திலும் சேவையைத் தொடங்க முடிவு செய்துள்ள ஆட்டோ ராஜாவை தந்தை என்றே அனைவரும் அழைக்கின்றனராம்.

 

-lankasri.com

TAGS: