மாநில அரசுக்கு பாதிப்பு ஏற்பட்டாலும் ஜி.எஸ்.டி. வரி விதிப்பை வேறு வழியின்றி ஏற்றோம் தம்பித்துரை பேட்டி

001மாநில அரசுக்கு பாதிப்பு ஏற்பட்டாலும் ஜி.எஸ்.டி. வரி விதிப்பை வேறு வழியின்றி ஏற்றுள்ளோம் என பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பித்துரை கூறி உள்ளார்.

சென்னை,

 பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பித்துரை சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

ஜி.எஸ்.டி. வரி மசோதா பாராளுமன்றத்தில் நிறை வேற்றப்பட்டதால் இன்றிரவு முதல் அமலுக்கு வருகிறது. எனவே அதுபற்றி பேசி பிரயோஜனம் இல்லை. இதை ஆரம்ப நிலையில் புரட்சித் தலைவி அம்மா எதிர்த்தார். மாநில அரசு களை பாதிக்கும் என்றார். அதன் பிறகு அதில் ஒரு சில திருத்தங்கள் கொண்டு வரப்பட்டது. மாநில அரசுக்கு பாதிப்பு ஏற்பட்டாலும் வேறு வழியின்றி ஏற்றுக் கொண்டோம். தற்போது மாநில அரசுக்கு நிதி ஒதுக்கீடு மற்றும் வருமானம் கிடைக்கும் என்பதால் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.

ஜி.எஸ்.டி. வரி விதிப்பு மசோதாவை முதலில் கொண்டு வந்தது காங்- தி.மு.க. கூட்டணி அரசுதான். ஆனால் அவர்களே இப்போது எதிர்க்கிறார்கள்.

ஜனாதிபதி தேர்தலில் பா.ஜனதா வேட்பாளரை ஆதரிப்பதால் கூட்டணிக்கு அச்சாரமாக கருத முடியாது. பொதுத் தேர்தலுக்கு இன்னும் காலம் உள்ளது. எனவே கூட்டணி பற்றி இப்போது பேச வேண்டிய தில்லை. தேர்தல் வரும் போது கட்சியின் தலைமை, நிர்வாகிகளுடன் கலந்து பேசி முடிவு செய்யும். அ.தி.மு.க.வில் கருத்து வேறுபாடு இருந்தாலும் நாங்கள் ஒரே பாதையில் தான் செல்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

-dailythanthi.com

TAGS: