இந்திய – சீன எல்லையில் போர் பதற்றம் : இருதரப்பு படைகள் குவிப்பு

001

புதுடில்லி : இந்தியா – சீனா இடையே, எல்லையில் உள்ள சிக்கிம்-பூடான்-திபெத் எல்லைகள் சங்கமிக்கும் இடம் யாருக்கும் சொந்தம் என்பது தொடர்பாக பல ஆண்டுகளாக பிரச்னை இருந்து வருகிறது. இது தொடர்பாக பலகட்டங்களாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட பிறகும் சமரசம் எட்டப்படவில்லை.

சமீபத்தில் கைலாஷ் மானசரோவர் யாத்திரைக்கு இந்திய யாத்திரிகர்களுக்கு சீனா அனுமதி மறுத்தது, இர தரப்பினரிடையே புதிய பிரச்னையை உருவாக்கி உள்ளது. இந்நிலையில் தற்போது இந்தியா – சீனா இடையே போர் சூழல் உருவாகும் நிலையை ஏற்படுத்தி உள்ள தோகா லா பொதுப்பகுதி யாருக்கு உரியது என்பது தான்.இந்த பிரச்னை தொடர்பாக சூழலை ஆய்வு செய்வதற்காகவே நேற்று (ஜூன் 29) இந்திய ராணுவ தளபதி பிபின் ராவத் கங்தோக் கோட்டத்திற்கு உட்பட்ட 17 மலைப்பகுதிகள், களிம்போக் கோட்டத்திற்கு உட்பட்ட 27 மலைப்பகுதி மண்டலங்களுக்கு சென்றார்.

தற்போதைய போர் பதற்றம் குறித்து இந்திய ராணுவம் தரப்பில் எந்த தகவலும் சொல்லப்படவில்லை.ஆனால் எல்லையில் இரு நாடுகளும், கூடுதலாக தலா 3000 வீரர்களை குவித்துள்ளன. இதற்கிடையில் எல்லையில் நிலவும் சூழல் குறித்து டில்லியில் இன்று அவசர கூட்டத்திற்கு ராணுவ தளபதி அழைப்பு விடுத்துள்ளார். இதில் ராணுவத்தின் அனைத்து உயரதிகாரிகளும் கலந்து கொள்ள உள்ளனர். இந்த கூட்டத்தில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என தெரிகிறது.

-dinamalar.com

 

 

 

TAGS: