மீண்டும் வெடிக்கிறதா? மெரினா போராட்டம்.. கதிராமங்கலம் மக்கள் சாரை சாரையாக சென்னை படையெடுப்பு

Kathirmangalamமத்திய அரசுக்கு சொந்தமான ஓஎன்ஜிசி நிறுவனம் கதிரமங்கலத்தில் 12 இடங்களில் எண்ணெய் எடுக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது. இப்போது அங்குஓஎன்ஜிசி நிறுவனம் குழாய்களை மற்றும் பணியில் ஈடுபட்டு வருகிறது.

இதனால் கதிராமங்கலம் மற்றும் அதையொட்டியுள்ள கொடியாலம் ஆகிய கிராமங்களில் குடிநீரில் எண்ணெய் கலந்து பாதிக்கப்பட்டுள்ளது. இதனையாடுவது கிராமமக்கள் குடிநீரில் எண்ணெய் கலந்திருப்பது குறித்து மாவட்ட கலெக்டர் ஆய்வு செய்ய வலியுறுத்தி கடந்த வெள்ளியன்று போராட்டம் நடத்தினார்கள்.

ஆனால் அவர்களை போலீசார் காட்டு மிராண்டித்தனமாக அவர்கள் மீது தடியடி நடத்தி அப்பாவி மக்கள் பலரை கைது செய்தனர். இதனால் மக்களின் போராட்டம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது.

மேலும் கதிராமங்கலம் கிராம மக்கள் சென்னைக்கு படையெடுத்து தலைமைச்செயலகம், கவர்னர் மாளிகை போன்ற முக்கிய இடங்களை முற்றுகை இடப்போவதாக உளவுத்துறைக்கு தகவல் கிடைத்துள்ளதாம். இதையடுத்து தலைமைச்செயலகம் உள்ளிட்ட பகுதிகளில் நூற்றுக்கணக்கான போலீசார் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், சமூக வலை தளங்களில் கதிராமங்கல மக்களுக்கு ஆதரவாக மெரினாவில் போராட்டம் நடத்த அழைப்பு விடுக்கப்பட்டு வருகிறது. ஜல்லிக்கட்டு போராட்டம் போல் வலுப்பெறாமல் இருக்க மெரினாவில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

-manithan.com

TAGS: