ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழகத்தில் நடந்த அறவழிப் போராட்டம் மாபெரும் வெற்றியடைந்தது.
இதனை தொடர்ந்து ஜல்லிக்கட்டு போட்டிகள் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கோலாகலமாக நடந்தது.
இந்நிலையில் 2017ம் ஆண்டு நடந்த ஜல்லிக்கட்டு போட்டிகளில் மிருகவதை நடந்துள்ளதாக உச்சநீதிமன்றத்தில் பீட்டா மனுத்தாக்கல் செய்துள்ளது.
மேலும் தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட திருத்தச் சட்டத்தை ரத்து செய்யக்கோரியும் கோரிக்கை விடுத்துள்ளது.
-lankasri.com
காவிரி நீர் பிரச்சினையில் உச்ச நீதிமன்றம் தமிழகத்திற்கு சாதகமாக தீர்ப்பு அளித்த போதும் கர்நாடக அரசு அதை நிறைவேற்றவில்லை .மத்திய அரசு அதை கண்டுகொள்ளவில்லை .பீட்டாவிற்கு என்ன தீர்ப்பு கிடைத்தாலும் நமது பரம்பரை வீர விளையாட்டு மஞ்சுவிரட்டை தொடர வேண்டும் .ஒட்டு மொத்தமாக தமிழர்கள் அதை எதிர்க்கும்போது அதை நிறுத்தலாம் .
பீட்டாவுக்கு இந்த முறை வாய்ப்புக்கள் அதிகம். தமிழக ஆட்சி பா.ஜ.க. வின் கையில். ரஜினியும் அவர்கள் பக்கம் சாய்வார் என்பதால் தான் அவர் அரசியலுக்கு வருவதை எதிர்க்கிறார்கள். தமிழகம், மோடி கையில் அகப்பட்டு தடுமாறுகிறது!