சென்னை: திருச்சி அருகே பொது இடத்தில் கட்டி வைத்து தலித் இளைஞர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக எவிடென்ஸ் கதிர் தம்முடைய ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: கடந்த ஒரு வருடத்தில் 25 தலித் செயல்பாட்டாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர் .
திருச்சி மாவட்டம், மணச்சநல்லூர் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட கிராமம் திருப்பஞ்சிலி. இக்கிராமத்தில் வசித்து வந்த தலித் இளைஞர் கதிர் (எ) கதிரேசன் கடந்த 08.07.2017 அன்று தங்கராசு, சுரேஷ், பாஸ்கர் உள்ளிட்ட 15 பேர் கொண்ட சாதி இந்து வன்கொடுமை கும்பலால் கொடூரமான முறையில் அடித்து சித்திரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார்.
இதுகுறித்து மணச்சநல்லூர் காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு 3 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த கொடிய தாக்குதல் பொது மக்கள் முன்னிலையில் நடந்திருக்கிறது.
இச்சம்பவம் குறித்து எமது எவிடன்ஸ் அமைப்பின் உண்மையறியும் குழுவினர் சம்பந்தப்பட்ட இடத்திற்கு 09.07.2017 அன்று நேரடியாக சென்று களஆய்வு மேற்கொண்டனர்.
சாதி மறுப்பு திருமணம்
களஆய்வில் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் பத்திரிக்கைச் செய்தி வெளியிடப்படுகிறது. திருப்பஞ்சிலி கிராமத்தில் வசித்து வந்த கதிர் (எ) கதிரேசன் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு ஆதிக்க சமூகத்தைச் சேர்ந்த நந்தினி என்கிற பெண்ணை காதலித்து திருமணம் செய்துள்ளார். கதிரேசனும் நந்தினியும் கதிரேசனின் பெற்றோர் மற்றும் சகோதர்களுடன் வசித்து வந்தனர்.
அத்துமீறல்
கதிரேசனின் தந்தை கணேசன் தப்படிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் கடந்த 08.07.2017 அன்று காலை சுமார் 6.00 மணியளவில் சாதி இந்துவான தங்கராசு (57) த.பெ.வீரபத்திரபிள்ளை, அவரது மகன்கள் சுரேஷ் (37), பாஸ்கர் (30) ஆகிய 3 பேர் கொண்ட கும்பல் கதிரேசன் வீட்டிற்கு வந்துள்ளனர். வீட்டிற்குள் அத்துமீறி உள்ளே புகுந்து கதிரேசனை தேடியுள்ளனர். அங்கிருந்த பொருட்களை எல்லாம் காலால் எட்டி உதைத்துவிட்டு பீரோவை திறந்தும் பார்த்துள்ளனர்.
குழாய் உடைத்ததாக கதை
கதிரேசனின் மனைவி நந்தினியும் தாயார் மல்லிகாவும் எதற்காக கதிரேசனை தேடுகிறீர்கள்? என்று கேட்டதற்கு, என் தோட்டத்தில் இருந்த பிளாஸ்டிக் குழாயினை கதிரேசன் சேதப்படுத்திவிட்டான். அவனை கொல்லாமல் விடமாட்டோம் என்று கூறிக்கொண்டே அந்த கும்பல் வெளியேறி இருக்கிறது.
கொடூர தாக்குதல்
மறுபடியும் 30 நிமிடம் கடந்து வீட்டிற்கு வந்த அதே கும்பல் நந்தினியிடம், உன் புருசன் எங்கு இருக்கிறான்? மரியாதையாக சொல் என்று மிரட்டியுள்ளனர். வீட்டிற்கு அருகாமையில் உள்ள காட்டு பகுதியில் கதிரேசன் இயற்கை உபாதை கழிப்பதற்காக சென்றிருக்கிறார். அதனை தெரிந்து கொண்டு அந்த பகுதிக்கு சென்ற தங்கராசும் சுரேசும் பாஸ்கரும் கதிரேசனை பிடித்து சாதி ரீதியாக இழிவாகப்பேசி செருப்புக் காலால் எட்டி உதைத்து தாக்கியுள்ளனர். இரும்புக் கம்பியால் அவரது முகத்தில் அடிக்க பற்கள் உடைந்தது.
கெஞ்சிய கதிர்
அந்த பகுதிக்கு நந்தினியும் மல்லிகாவும் விரைந்துள்ளனர். நந்தினி அழுது கொண்டே, என் புருசனை அடிக்காதீர்கள் என்று காலில் விழுந்து கதறி அழுதிருக்கிறார். அந்த கும்பல் நந்தினியின் முடியைப் பிடித்து இழுத்து வயிற்றில் எட்டி உதைத்துள்ளனர். மல்லிகாவையும் கன்னத்தில் அறைந்துள்ளனர். பலத்த காயமடைந்த கதிரேசன் அழுதுகொண்டே, நான் எந்த குழாயையும் உடைக்கவில்லை என்று பரிதாபமாக கெஞ்சி அழுதிருக்கிறார்.
அடித்து நிர்வாணமாக்கி…
அந்த 3 பேரும் கதிரேசனை இரண்டு கைகளையும் முதுகுக்கு பின்னால் இழுத்து வைத்து கயிற்றால் கட்டி அடித்துக் கொண்டே இழுத்துச் சென்றுள்ளனர். திருப்பஞ்சிலி பஸ் நிறுத்தம் அருகில் உள்ள அரசமரத்தின் அடியில் கதிரேசனை அடித்து நிர்வாணமாக்கியுள்ளனர். அங்கு 15 பேர் கொண்ட கும்பல் கதிரேசனை சாதி சொல்லி இழிவாக திட்டிக் கொண்டே தாக்கியுள்ளனர்.
மக்கள் முன்னிலையில் தாக்குதல்
அதில் ஒருவர் கீழ்சாதி நாயிக்கு கட்சி கேக்குதா? என்று கூறி தாக்க, மற்றொருவர் எங்க பொண்ணுங்கள திருமணம் செய்து கொண்டால் எங்களுக்கு சரிக்கு சமமாக வந்துவிடுவாயா? என்று கூறி தாக்கியிருக்கின்றனர். இந்த தாக்குதல் பொது மக்கள் முன்னிலையில் நடந்திருக்கிறது. அந்த இடத்திற்கு நந்தினியும் மல்லிகாவும் சென்று அடித்தவர்கள் காலில் விழுந்து கெஞ்சி கதிரேசனை விட்டுவிடுங்கள் என்று கதறியிருக்கின்றனர். அந்த 3 பேரும் கட்டப்பட்டிருந்த கதிரேசனை இருசக்கர வாகனத்தில் ஏற்றிக் கொண்டு காட்டுப்பகுதிக்கு சென்றுள்ளனர்.
பிணமாக கிடந்த கதிர்
இந்த சம்பவம் அறிந்ததும் கதிரேசன் தந்தை கணேசன் மணச்சநல்லூர் காவல்நிலையத்திற்கு நேரடியாக சென்று புகார் தெரிவிக்க போலீசார் காலை சுமார் 9.00 மணிக்கு அந்த பகுதிக்கு வந்துள்ளனர். திருப்பஞ்சிலி கிராமத்தில் உள்ள தங்கராசுவின் தோட்டத்தில் முதுகுக்கு பின்னால் கைகள் கட்டப்பட்டு முகம் சிதைக்கப்பட்டு இரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார் கதிரேசன்.
குழாய்க்காக கொலை இல்லை
ஏற்கனவே தங்கராசுவின் தோட்டத்தில் இருந்த பிளாஸ்டிக் குழாயினை கதிரேசன் தான் உடைத்தார் என்று சந்தேகப்பட்டு ஒருமுறை கதிரேசன் தாக்கப்பட்டிருக்கிறார். சம்பவம் நடக்கின்ற முந்தைய நாள் கதிரேசனுக்கும் தங்கராசுவின் மகன் சுரேஷ், பாஸ்கர் ஆகியோருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டிருக்கிறது. குழாய் உடைக்கப்பட்டது என்று சந்தேகம் கொண்டு இந்த கொலை நடந்ததாக தெரியவில்லை.
சாதி மறுப்பு திருமணம்
சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டு துணிச்சலாக வாழ்ந்ததற்காகவும் தலித் மக்களின் உரிமைகளுக்காக அரசியல் ரீதியாக அப்பகுதியில் குரல் கொடுத்ததற்காகவும் வன்மம் கொண்ட இந்த சாதி கும்பல் குழாய் உடைப்பு என்கிற ஒரு போலியாக கதையை கட்டி கதிரேசனை கொலை செய்துள்ளனர். கடந்த ஒரு வருடத்தில் மது ஒழிப்பிற்காகவும், தீண்டாமை எதிர்ப்பிற்காகவும், சாதி மறுப்பு திருமணம் செய்து வைத்ததற்காகவும் 25 தலித் மனித உரிமை ஆர்வலர்கள் தமிழகத்தில் கொல்லப்பட்டுள்ளனர்.
கண்டனம்
சாதியப் படுகொலை என்பது சொந்த விரோதத்தின் அடிப்படையல் பெரும்பாலும் நடத்தப்படுவதில்லை. சாதி எதிர்ப்பு உணர்வினை வெளிப்படுத்துகிற இளைஞர்கள் மீதுதான் இத்தகைய கொடூர கொலைகள் நடக்கின்னறன. அதுமட்டுமல்ல கதிரேசனை 15 பேர் கொண்ட கும்பல் கடுமையாக அடித்து சித்திரவதை செய்திருக்கிறது. முக்கிய குற்றவாளிகள் 3 பேரை மட்டும் தான் போலீசார் கைது செய்திருக்கின்றனர். மற்ற நபர்களை போலீசார் இதுவரை கைது செய்யவில்லை. இது கண்டனத்திற்குரியது.
போலீஸில் புகார்
இச்சம்பவம் குறித்து மணச்சநல்லூர் காவல்நிலையத்தில் குற்றஎண்.278/2017 பிரிவுகள் 294(b), 342, 506(2), 302 இ.த.ச. மற்றும் பட்டியல் சாதியின் பட்டியல் பழங்குடியினர் வன்கொடுமை தடுப்பு திருத்த சட்டம் 2015 பிரிவுகள் 3(1)(r) & (s), 3(2)(v) ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
பரிந்துரைகள்
• படுகொலை செய்யப்பட்ட கதிரேசன் குடும்பத்தினருக்கு ரூ.25 இலட்சம் நிவாரணம் வழங்கப்பட வேண்டும்.
• படுகொலையில் ஈடுபட்ட மூன்று முக்கிய குற்றவாளிகள் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட வேண்டும். மற்ற குற்றவாளிகள் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும்.
• இறந்து போன கதிரேசனின் மனைவிக்கும், அவரது சகோதரருக்கும் அரசு வேலை வழங்க வேண்டும்.
• மனித உரிமை காப்பாளர்கள் பாதுகாப்பிற்கென்று சிறப்பு சட்டத்தினை மத்திய அரசு இயற்றிட உடனே உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு எவிடன்ஸ் கதிர் தம்முடைய பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
அந்த குற்றவாளிகள் இவ்வுலகில் வாழ தகுதி அற்றவர்கள்.
தமிழ் நாட்டில் நடப்பதெல்லாம் பகுத்தறிவுக்கு ஒவ்வாத ஈன செயல்களாக இருக்கின்றது. தினசரி அங்கு அங்கு நடக்கும் செயல்களை தொலைக்காட்சியில் பார்க்கும் போது நம்மவர்கள் இவ்வளவு ஈன ஜென்மங்களா என்று எண்ண தோன்றுகிறது– இது எல்லா நிலைகளிலும் இருக்கிறது– ஊழல்,மூடத்தனம்,ஜாதிவெறி,மனிதாபிமானமின்மை , கீழ்த்தர நடவடிக்கை, இன்னும் சொல்லவே எரிகிறது. நேற்று கமலஹாசன் ஊழல் பற்றி கூறி இருக்கிறார். கூறுவோர் கூறிக்கொண்டே இருக்கவேண்டும்- ஆனால் எவனும் கண்டுகொள்ளமாட்டான். ஜெயா லலிதா செய்யாத அநியாயமா? இன்றும் அவளை அம்மா என்று கொண்டாடும் ஈன ஜென்மங்கள். பெங்களூர் சிறைச்சாலையில் இருக்கும் மன்னார்குடிமாபியா தலைவிக்கு சிறப்பு சலுகைகள்வேறு – இதற்க்கு அவள் 2 கோடி அள்ளி கொடுத்திருக்கிறாள்– சீ-நாதாரிகள். OPS தன்னுடைய கிராமத்தில் மாபெரும் கிணறு வெட்டியது அங்கே பெரிய போராட்டத்தை ஆரம்பித்து உள்ளது. பாலில் கலப்படம் என்று அந்த அமைச்சரே கூறி இருக்கிறார்
இப்போதைய அரசு ஆதிக்கசக்திகளின் அரசு. அது காவல்துறைக்கும் தெரியும். கண்டு கொள்ள மாட்டார்கள் என்பதே நிதர்சனம்.
தமிழர்களுக்கு தான் சூடு சுரணை மானம் வீரம் இதுக்கும் ..11 ம் நூற்றாண்டுகளுடன் தென் இந்தியாவில் தமிழ் இனம் மறைந்து விட்ட்து 300 வருடங்கள் தகர தமிழ் நாடு தெலுங்கர்களால் ஆளப்பட்டது பிலிபினின்ஸ் மக்கள் கருத்த தோல் கொண்டவர்கள் பல நூற்றாண்டு ஸ்பானிஷ் ஆதிக்கம் இந்த மக்களை வெள்ளை தோல் கொண்டவராக மட்டும் அல்ல ,,கலாச்சார ..உணவு எல்லா பழக்கங்கங்களையும் மாற்றி விட்ட்து ..தகர தமிழ் நாட்டில் ,..பகுத்தறிவு பற்றி கண்மணிகள் கூவுகின்றன ..அங்கிருந்து வெளிவரும் YOU TUBE நிகழ்ச்சிகளை பாருங்கள் என்னே அழகு தமிழ் பேசுகின்றார்கள் புல்லரிக்கின்றது
தகர தமிழ் நாட்டில் தான் ஆசியாவில் கேவலமான காவல் துறை உள்ளது …அரசியல் வியாதிகளின் எடுபிடிகள் என்று பெயர் மாற்றலாம் ..எல்லாம் எண்கள் 2G கொண்டான் மராமத்து அமைச்சராக பணியேற்றவுடன் தொடங்கியது
தமிழர்களுக்கு தான் ரோசம் மானம் வீரம் சூடு சுரணை இருக்கும்
300 ஆண்டுகள் இன்றைய தகர தமிழ் நாடு தெலுங்கர்களினால் ஆளப்பட்ட்து. எப்படி இருக்கும் விளைவு ?சிலவேளை உண்மை தமிழர்கள் காடுகளில் வாழலாம் அங்கு யார் கண்டார்கள்
தமிழர்கள் சாதி சண்டை போடும் வரை தமிழினம் முன்னேறவே முடியாது .மற்ற மாநிலத்தவன் நம் தலைமீது ஏறிவிளையாடும் இன்றைய நிலை தொடரும் ,நம் மொழியும் ,இனமும்,நிலமும் காணாமல் போய்விடும் .ஒன்றுபடுவோம் உயர்வோம் .
கற்றோர் அறிவுடையோர் என்பது இலக்கணமானால் எது சரி எது தவறு என்று புரிந்து கொண்டு திருந்தி வாழ்வதே தனிநபர் மேன்மைக்கும் இனக்குழுவின் வளர்ச்சிக்கும் நன்மையளிக்கும். இல்லையேல் பாவாணர் சொல்லியது போலாகும்:
“பிறவிக்குலப் பிரிவினையால் விளையும் பெருங்கேடுகள்:-
1. உலகுள்ள அளவும் ஒற்றுமை யின்மை
2. இன முன்னேற்ற மின்மை
3. தமிழ்மொழி யிலக்கிய வளர்ச்சி யின்மை
4. தமிழ்ப் பண்பாட் டழிவு
5. அடிமைத்தனமும் தாழ்வும் தொடர்கை
6. மதிவிளக்கமும் உடல் வலிமையுமுள்ள மகப்பேறின்மை
7. அயலார்க்கும் தகுதியில்லார்க்கும் பதவிப் பேறு
8. பகுத்தறிவைப் பயன்படுத்தாமை
ஒருவர் எத்துணை யுயரினும், தம்மை நாடார் என்று சொல்லிக் கொள்ளின், குல ஏணியில் அவருக்குரிய படியில்தான் அவரை வைப்பர். அதனால் அவர் வெள்ளாளரொடு உறவாட முடியாது. அங்ஙனமே, வெள்ளாளரும் எத்துணை உயர்வாயிருப்பினும் அவர் பிராமணருக்குத் தாழ்ந்தவராகவே கருதப் படுவார். ஆதலால்,, ஆரியக் குல ஏணியைத் தூள் தூளாக்கிச் சுட்டெரித்தல் வேண்டும்.”
தமிழர் வரலாறு – 2: ஞா. தேவநேயப் பாவாணர்
தமிழறிஞர் ஒருவர் சொன்னதைப் பிற தமிழ் நாட்டுத் தமிழரிஞரில் பலர் வாய் திறந்தும் பேசுவதில்லை காரணம் அவரும் சாதியப் பற்றுடையோர்தாம். தன்னை அறிஞர் என்று சொல்லிக் கொண்டு அவரும் அறியாமையில் வாழ்ந்து வருவது வேடிக்கை வேதனை.
இதில் தன்னைச் சமய அறிஞர் என்று சொல்லிக் கொண்டு தமிழ் நாட்டிலும் சரி அங்கிருந்து இங்கு வந்து மற்றவருக்கு ஆன்மிகச் சிந்தனைகளைப் போதிப்பவரும் சரி அத்தகைய சாதியப் பற்றுடையோராகி இருந்தால் அவர்தம் ஆன்மிகப் போதனை பொய்யாகும்.
இதை அழிக்க முடியாது. இதற்கு காரணம் திராவிடக் கட்சிகள் இன்னும் இத்தியாதி இத்தியாதி என்று காரணம் கூறுவோர் தானே திருந்தியபாடில்லை என்பதுதான் உண்மையிலும் உண்மை. இவர்களே திருந்தாத போது இவர் பிறருக்கு அறிவுரை கூற தகுதி என்ன இருக்கு?
இதே நிலை இன்றும் மலேசியாவில் நிலைத்திருப்பது இன்னும் கொடுமை.
படித்தவர்கள் என்று பெயர். ஆனால் சாதியம் என்றவுடனே நான் மேல்சாதி என்று பறைசாற்றிக் கொள்வதால் அவன் காட்டும் நன்னெறி யாது? மற்றவரைப் பழிக்கும் எந்த நெறியும் நன்னெறியாகாது. இது தமிழருக்குத் புரிந்தால் சாதியப் போற்றுதலை மறப்பார்.