நாம மட்டும் முழுசா இறங்கினா அவ்ளோதான்.. 5000 கிலோமீட்டர் வரைக்கும் சீனா புஸ்ஸாகி விடும்!

Agniடெல்லி: ஜம்மு காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் குடைச்சல் என்றால் சிக்கிம் எல்லையில் சீனா சீண்டிப் பார்க்கிறது.

சீனா தம்மை வலிமை மிக்க நாடாக கருதிக் கொண்டு வாலாட்டிப் பார்க்கிறது. 1962-ம் ஆண்டு யுத்தம் பற்றியே பேசிக் கொண்டிருக்கிறது சீனா.

ஆனால் 1967-ம் ஆண்டு சிக்கிம் எல்லையில் சிக்கி சின்னபின்னமான வரலாறை ரொம்பவே வசதியாக மறந்துவிடுகிறது. சிக்கிமின் நாதுலா கணவாய் யுத்தத்தில் 400 சீன ராணுவ வீரர்கள் கொன்று குவிக்கப்பட்டனர் என்பது வரலாறு.

சீனாவுக்கு சரி சமமான ஆயுத பலம் நம்மிடம் இருக்கிறது. அணு ஆயுதங்களும் இருக்கின்றன. நமது அணு ஆயுத ஏவுகணைகள் 350 கி.மீ தொடங்கி 5,000 கி.மீ வரை தாக்கி0 அழிக்கும் வல்லமை கொண்டது.

அதாவது ஒட்டுமொத்த சீனாவையும் நாசமாக்கக் கூடிய வல்லமை கொண்ட அணு ஆயுதங்கள் நம்மிடம் உள்ளன. நமது ஏவுகணைகள் பாயக் கூடிய தூரங்கள்:

பிரித்வி ஏவுகணை பிரித்வி ஏவுகணை-2 2003ல் ராணுவத்தில் இணைக்கப்பட்டது. இது 350 கி.மீ. தொலைவில் உள்ள இலக்கைத் தாக்கக் கூடியது.

அக்னி ஏவுகணை-1

அக்னி ஏவுகணை 2007-ம் ஆண்டு ராணுவத்தில் சேர்க்கப்பட்டது. இது 700 கி.மீ. தொலைவில் உள்ள இலக்கைத் தாக்கி அழிக்கும்.

அக்னி ஏவுகணை- 2

2011-ம் ஆண்டு ராணுவத்தில் சேர்க்கப்பட்டது அக்னி ஏவுகணை-2. இது 2,000 கி.மீக்கும் அதிகமான தொலைவில் உள்ள இலக்கை தாக்கும்.

அக்னி ஏவுகணை 3

இது 2014-ம் ஆண்டு ராணுவத்தில் இணைக்கப்பட்டது. 3,200 கி.மீக்கும் அதிகமான தொலைவை தாக்கி அழிக்கும்.

அக்னி ஏவுகணை-4,5

தயாரிப்பில் உள்ள அக்னி ஏவுகணை-4 3,500 கி.மீ தொலைவில் உள்ள இலக்கை அழிக்கக் கூடியது. அக்னிஏவுகணை- -5 இது 5,200 கி.மீக்கும் அதிகமான தொலைவில் உள்ள இலக்கை அழிக்கக் கூடியது.

tamil.oneindia.com

TAGS: