இவர் தான் இந்தியாவின் அடுத்த அம்பானி..!

babaramdev

யோகா குரு என்று அழைக்கப்படும் பாபா ராம்தேவ் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் பதஞ்சலி நிறுவனம் தற்போது பார்மசி முதல் எப்எம்சிஜி துறை வரை மிகப்பெரிய வளர்ச்சியை அடைந்துள்ளது. இந்நிறுவனத்தின் வளர்ச்சியைக் கண்டு கடுப்பில் இருக்கும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு மேலும் பயத்தைக் கூட்டியுள்ளார் பாபா ராம்தேவ்.

இதுவரை செய்து வரும் வர்த்தகம் போதாது என்று பாபா ராம்தேவ் பிரைவேட் செக்கியூரிட்டி துறையில் புதிதாகத் தனது வர்த்தகத்தைத் துவங்கியுள்ளார்.

அட இதுல என்னபா இருக்கு…?

பிரைவேட் செக்கியூரிட்டி

இந்திய சந்தையில் பிரைவேட் செக்கியூரிட்டி மதிப்பு மட்டும் 40,000 கோடி ரூபாய், இதுநாள் வரையில் இத்துறையில் சில தனியார் நிறுவனங்கள் மட்டுமே ஆதிக்கம் செலுத்தி வந்த நிலையில், இத்துறையில் இருக்கும் கார்ப்பரேட் நிறுவனத்திற்கும் ஆப்பு வைக்கக் கிளம்பியுள்ளார் பாபா ராம்தேவ். இது இந்தியாவில் பன்னாட்டுக் கார்பரேட் ஆதிக்கத்தை ஒழிக்கும் மிகப்பெரிய விஷயம்.

புதிய யுக்தி..

இதுவரை பாபா ராம்தேவ் வர்த்தகம் செய்து வந்த துறைகள் அனைத்தும் நுகர்வோர் சந்தையை மட்டுமே சார்ந்து இருந்தது. தற்போது அறிமுகப்படுத்தியுள்ள பிரைவேட் செக்கியூரிட்டி மூலம் புதிய பாதையில், தான் இதுவரை வர்த்தம் செய்யாத துறையில் இறங்க போதுவது உறுதியாகியுள்ளது. இதனால் பாபா ராம்தேவ் நிறுவனம் அடுத்து எந்தத் துறையில் இறங்குவார்..? சொல்லப்போனால் முகேஷ் அம்பானிக்குப் போட்டியாக டெலிகாம் துறையில் கூட இறங்கலாம்.

10 வருடம்

பார்மா, ஆயுர்வேதம், எப்எம்சிஜி எனப் பல துறைகளில் பன்னாட்டு நிறுவனங்களுக்குப் போட்டியாகப் பல பொருட்களை அறிமுகம் செய்து கார்ப்பரேட் நிறுவனங்களைத் திக்குமுக்காட வைத்துள்ளார் ராம்தேவ். அது அனைத்தும் கடந்த 10 வருடத்தில் நடந்தது என்றால் உங்களால் நம்பமுடிகிறதா.

டாப் 10 பிராண்ட்

சமீபத்தில் இந்தியாவில் மிகவும் சக்தி வாய்ந்த, மக்கள் அதிகம் விரும்பக் கூடிய பிராண்ட்களை Ipsos நிறுவனம் ஆய்வு செய்தது. இப்பட்டியலில் அமெரிக்க நிறுவனங்களான கூகிள், மைக்ரோசாப்ட் மற்றும் பேஸ்புக் முதல் இடத்தைப் பிடித்தாலும் 4வது இடத்தில் பதஞ்சலி இடம்பிடித்து அசத்தியுள்ளது.

மக்கள் ஆதரவு..

சந்தையில் இருக்கும் முன்னணி நிறுவனங்களைப் போல் அல்லாமல் பாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவனம் மிகப்பெரிய மக்கள் சக்தியுடன் தான் துவங்கியது. யோகா, ஆயுர்வேதம், மதக் குரு, உடல்நல நிபுணர் என முகங்களைக் கொண்டு மக்கள் கவர்ந்தது மட்டும் அல்லாமல், இந்நிறுவனத்தின் தயாரிப்புகள் மக்களை அதிகளவில் கவர்ந்துள்ளது. இது எந்த ஒரு பெரிய நிறுவனத்திற்கும் இல்லாத ஒன்று. குறிப்பாகப் பன்னாட்டு நிறுவனங்களுக்கு. இதுவே ராம்தேவின் வெற்றிக்கு அடிப்படையாக இருந்தது.

patanjalibabaramdev

 

புதிய வாடிக்கையாளர்கள்

யோகா, ஆயுர்வேதம் ஆகியவற்றில் துவங்கி பாரம்பரியம், சுகாதாரம், ஆன்மீகம், நீதி மற்றும் தேசபக்தி எனப் பல வழிகளில் பதஞ்சலி நிறுவனம் வாடிக்கையாளர்களைச் சேர்த்துள்ளது.

சாதியும்..பிரிவினையும்..

இந்தியா இதுவரை அனைத்தும் துறைகளிலும் சொல்லமுடியாத அளவிற்கு வளர்ச்சி அடைந்திருந்தாலும், சாதி என்ற ஒரு விஷயத்தில் இன்னும் மாறவில்லை என்றே சொல்ல வேண்டும். பாபா ராம்தேவ் பிர்படுத்தப்பட்ட சாதியை சேர்ந்தவர் என்ற பிம்பம் இந்திய மக்கள் மத்தியில் ஆழமாகப் பதிந்துள்ளது. இது நடுத்தர மக்களைக் கவரும் ஒன்றாக இருக்கும் காரணத்தால் வாடிக்கையாளர்க எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

பிஜேபி

பதஞ்சலி நிறுவனத்திற்குப் பாரதிய ஜனதா கட்சி மற்றும் தனது மூலையாகச் செயல்படும் ஆர்எஸ்எஸ் அமைப்பின் ஆதரவு அதிகளவில் இருப்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான். ஆனாலும் சாதி பிரிவினையின் காரணமாகப் பல முறை சர்சையான கருத்து இதே அமைப்பினரால் தெரிவிக்கப்பட்டது.

அரசியல் பலம்

பாபா ராம்தேவ் அவர்களுக்கு வர்த்தகத் திறன் உடன் அரசியல் பலமும் இருப்பதால், மிகவும் குறைந்த காலக்கட்டத்தில் பல துறை சார்ந்த வர்த்தகத்தில் இறங்கி வருகிறது. அப்படிப் பார்த்தால் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் முதல் டாடா, பிர்லா நிறுவனம் வரை அனைத்து நிறுவனங்களும் தான் அரசியல் பலம் கொண்டுள்ளது. ஆனால் பதஞ்சலி நிறுவனம் நுகர்வோர் சந்தையைச் சார்ந்தது மட்டுமில்லாமல் அனைத்து தயாரிப்புகளும் விலை குறைவானது என்பதால் பெரிய அளவிலான வெற்றியை அடைந்துள்ளது.

மாதம் மாதம்..

கார்பரேட் நிறுவனங்களுக்கு ஒரு தயாரிப்பை சந்தைப்படுத்த வேண்டும் என்றால் குறைந்தபட்சம் 6 மாதம் முதல் 1 வருடம் ஆகும். ஆனால் பதஞ்சலி நிறுவனத்தில் ஒவ்வொரு மாதத்திற்கும் ஒரு தயாரிப்பு தொடர்ந்து வெளியாகி வருகிறது. இது சந்தையிலும் வெற்றி பெறுவதால் கார்பரேட் நிறுவனங்களின் வர்த்தகம் மிகப்பெரிய அளவிலான வர்த்தகப் பாதிப்பை சந்தித்துள்ளது.

அடுத்தத் திட்டம்..

பாபா ராம்தேவ் புதிதாகப் பிரைவேட் செக்கியூரிட்டி துறையில் இறங்கியுள்ள நிலையில், அடுத்தச் சில மாதங்களில் இந்நிறுவனம் பங்குச்சந்தையில் இறங்கவும் திட்டமிட்டு வருவதாகத் தகவல்கள் கிடைத்துள்ளது.

டாடா பிர்லா..

இக்குறைந்த காலகட்டத்தில் ராம்தேவ் தலைமையிலான பதஞ்சலி நிறுவனம் இவ்வளவு பெரிய வெற்றியை அடைந்துள்ள நிலையில், பங்குச்சந்தை இறங்கிய பின் இந்தியாவின் அடுத்த டாடா, பிர்லா, அம்பானி அளவிற்கு இவர் உயர்வார். பொறுத்திருந்து பார்ப்போம்..

-tamil.goodreturns.in

TAGS: