இந்திய வீரர்களை கொல்வோம்: சீனா எச்சரிக்கை

dhok lam

இந்திய-சீனா எல்லையான டோக்லம் எல்லைப் பகுதியில் இருந்து இந்திய படைகள் திரும்பிச் செல்லா விட்டால் அவர்கள் கைது செய்வோம் அல்லது கொல்வோம் என இந்தியாவுக்கான முன்னாள் சீன தூதர் லியூ யூஃபா பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சிக்கிம் மாநிலத்தின் எல்லையான டோக்லம் பகுதியில், சீன அத்துமீறலை தடுக்க, இந்திய ராணுவம் படைகளை குவித்துள்ளது. ஆனால், தொடர்ந்து அத்துமீறும் நோக்கத்துடன், சீனாவும் தனது படைகளை குவித்து போர் பதற்றத்தை உருவாக்கி வருகிறது.

திபெத் எல்லையில் போர் ஒத்திகை நடத்துவது, ஆயுதங்களை குவிப்பது உள்ளிட்ட செயல்களில் சீனா ஈடுபட்டு வருகிறது.

இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய இந்தியாவுக்கான சீன தூதர் லியூ யூஃபா, எனக்கு தெரிந்து சர்வதேச சட்டத்தின்படி ராணுவ சீருடையில் எல்லை தாண்டுவோரை 3 விதமாக தான் கையாள வேண்டும்.

ஒன்று அவர்களை எச்சரித்து திருப்பி அனுப்புவது. அல்லது கைது செய்வது. அல்லது தொடர்ந்து எல்லை தாண்டினால் அவர்கள் கொல்வது. இந்தியாவுக்கு சீனா போதிய அளவு அவகாசம் கொடுத்து விட்டது. ஆனால் இந்திய படைகள் இதனை பிரச்னையாக்க பார்க்கின்றன என தெரிவித்துள்ளார்.

-lankasri.com

TAGS: