சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற பெங்களூரு சிறையில் உள்ள சசிகலா சகல வசதிகளுடன் ராஜபோகமாக இருந்ததை சிறை அதிகாரிகள் ஒப்புக்கொண்டுள்ளனர்.
கர்நாடக சிறைத்துறை டிஜிபி சத்தியநாராயண ராவ் சசிகலாவிடமிருந்து 2 கோடி ரூபாய் லஞ்சம் பெற்றுக்கொண்டு சசிகலாவுக்கு சிறையில் சகல வசதிகளையும் செய்து கொடுத்ததாக டிஐஜி ரூபா அண்மையில் குற்றம்சாட்டியிருந்தார்.
இதையடுத்து ரூபாவின் குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரிக்க கர்நாடக அரசு சார்பில் குழு அமைக்கப்பட்டது. குற்றச்சாட்டுகள் தொடர்பான வீடியோ மற்றும் போட்டோக்களும் வெளியாகின.
சிறையில் நடந்த விதிமீறல் பற்றி ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி தலைமையிலான உயர்மட்டக்குழு விசாரணை நடத்தியுள்ளது. அந்த குழு தனது அறிக்கையை தாக்கல் செய்யவுள்ளது.
சசிகலாவுக்கு சிறையில் சமையலறை உள்ளிட்ட சிறப்பு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டது உண்மைதான் என்று டிஜிபி ரேவண்ணா, ஏடிஜிபி மேகரிக் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளனர்.
சசிகலா அறையில் டிவி, சமையல் பாத்திரங்கள் இருந்தது உண்மைதான் என்றும் அவர்கள் கூறியுள்ளது சசிகலாவிற்கு மேலும் சிக்கலை உருவாக்கியுள்ளது.
-lankasri.com
லஞ்ச ஊழல் நிறைந்த கர்னாடக காவல் நிலைய அதிகாரிகளை பணி நீக்கம் செய்யவேண்டும்.