இந்திய ராணுவத்தில் ஆயுதப் பற்றாக்குறை.. போர் வந்தால் 10 நாட்களுக்குத்தான் தாங்கும்: பகீர் தகவல்

indian-armyடெல்லி: இந்திய ராணுவத்தில் ஆயுதப் பற்றாக்குறை நிலவுவதாகவும், போர் வந்தால் 10 நாட்களுக்குதான் ஆயுதங்கள் போதுமானதாக இருக்கும் என்றும் மத்திய கணக்கு தணிக்கையாளர் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தில் கணக்கு தணிக்கையாளர் குழு தனது அறிக்கையை சமர்ப்பிப்பது வழக்கம். தற்போது சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் ராணுவத்தில் நிலவும் ஆயுதப் பற்றாக்குறை குறித்த தகவல்கள் அம்பலமாகியுள்ளன.

ஆயுதப்பற்றாக்குறை பிரச்சினை முன்பிருந்தே நீடித்து வருகிறது. அது படிப்படியாக குறைக்கப்பட்டு வந்தாலும் கூட இன்னும் நிறையவே பற்றாக்குறை உள்ளது என்று சி.ஏ.ஜி அறிக்கை சுட்டிக் காட்டுகிறது.

10 நாட்களே தாங்கும்

2013ம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட சி.ஏ.ஜி அறிக்கையில் 50 சதவீத ஆயுதங்களுக்கு பற்றாக்குறை உள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தது. அதாவது, 170 வகையான ஆயுதங்களில் 85 ஆயுதங்கள், போர் நடந்தால், 10 நாட்களுக்குள்ளாக தீர்ந்துவிடும் என அந்த அறிக்கை சுட்டிக் காட்டியது.

குறைந்த அளவு

2016 செப்டம்பர் நிலவரப்படி ராணுவத்தில் 40 சதவீத ஆயுதப் பற்றாக்குறை உள்ளதாக, நேற்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட சி.ஏ.ஜி அறிக்கையில், சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. அதாவது3 வருடங்களில் 10 சவீதம் அளவுக்குதான் ஆயுதப் பற்றாக்குறை குறைக்கப்பட்டுள்ளது.

கவலை

நேற்று தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில் மொத்தமுள்ள 152 வகை ஆயுதங்களில் 61 வகை ஆயுதங்கள், போர் ஏற்பட்டால் 10 நாட்களுக்கு தாங்காது என்றும், இது கவலைக்குரிய விஷயம் என்றும் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆயுத கொள்முதல்

ஆயுதங்கள் குறைபாட்டை கருத்தில் கொண்டு முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு 2015ல் வேகவேகமாக ஆயுதங்களை வாங்க தொடங்கியது. ஆனாலும், 2013-16க்கு இடைப்பட்ட காலத்தில் ஆயுத கையிருப்பில் பெரிய அளவுக்கு முன்னேற்றம் இல்லை என்று சி.ஏ.ஜி மேலும் கூறுகிறது.

ராணுவ பயிற்சி

24 வகையான ஆயுதங்கள், ராணுவ பயிற்சியின்போது தேவைப்படும். ஆனால் 3 வகை ஆயுதங்கள் மட்டுமே 5 நாட்களுக்கு மேலான பயிற்சிக்கு போதுமானதாக இருந்தது. எனவே ஆயுதப் பற்றாக்குறை காரணமாக ராணுவ பயிற்சியின் கால அளவு குறைக்கப்பட்டது என்றும் சி.ஏ.ஜி அறிக்கை சுட்டிக் காட்டுகிறது.

tamil.oneindia.com

TAGS: