6 மாதங்களுக்குள் இஸ்லாத்தை தழுவாவிட்டால் கை, கால்கள் துண்டிக்கப்படும் என கேரள எழுத்தாளர் கே.பி.ராமனுன்னிக்கு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. பெயர், முகவரி குறிப்பிடாமல் அனுப்பப்பட்ட கடிதத்தில் மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது.
இது குறித்து எழுத்தாளர் ராமனுன்னி தி இந்து ஆங்கில நாளிதழிடம் கூறும்போது, “முதலில் இது ஏதோ வெற்று மிரட்டல் என்று நினைத்து அஜாக்கிரதையாகவே இருந்தேன். ஆனால், சக எழுத்தாளர்கள் அறிவுறுத்தியதின் பேரிலேயே தற்போது கோழிக்கோடு காவல் ஆணையரிடம் புகார் கொடுத்துள்ளேன்” என்றார்.
இந்து – முஸ்லிம் ஒற்றுமை
மத்யமம் மலையாள நாளிதழில் இந்து – முஸ்லிம் ஒற்றுமையை வலியுறுத்தி அண்மையில் தான் எழுதிய கட்டுரைகளால் எரிச்சலடைந்த யாரோ ஒருவரே இக்கடிதத்தை தனக்கு எழுதியிருப்பதாகக் கூறுகிறார் ராமனுன்னி.
ராமனுன்னி தனது கட்டுரைகள் மூலம் அப்பாவி முஸ்லிம்களை திசை திருப்ப முயற்சித்திருப்பதாகவும் ராமனுன்னி ஒரு மத அடிப்படைவாதி எனவும் கடிதத்தை எழுதியவர் குறிப்பிட்டுள்ளார்.
பல தெய்வ வழிப்பாட்டை பின்பற்றும் இந்து மதத்தையும் ஒரே தெய்வ வழிபாடு கொண்ட இஸ்லாம் மதத்தையும் ராமனுன்னி எப்படி ஒப்பிட்டு பேச முடியும் என்றும் அந்த மர்ம நபர் கேள்வி எழுப்பியுள்ளார்.
எச்சரிக்கை:
“உங்களை நான் கொல்லப்போவதில்லை. ஆனால், தொடுபுழாவைச் சேர்ந்த ஆசிரியர் டி.ஜே.ஜோசபின் கரம் துண்டிக்கப்பட்டதை நினைவுபடுத்துகிறேன். ஆறு மாதங்களுக்குள் இஸ்லாம் மதத்துக்கு மாறாவிட்டால் வலது கையும் இடது காலும் துண்டிக்கப்படும்” என அக்கடிதத்தில் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
-thehindu.com
செம்பருத்தியில் எப்பொழுதும் முஸ்லிம்களுக்கு எதிராக செய்திகள் வருகின்றனர் அவற்றில் இதுவும் ஒன்று
உண்மை செய்தியை பிரசுரித்தால் முஸ்லிம்களுக்கு எதிராக என்று வசை பாடுவதேன்?
உலக நடப்பை உள்ளது உள்ளபடியே பதிவேற்றுவது எப்படி தவறாகும்?