பெங்களூரு சிறையில் சசிகலா விதிமுறைகளை மீறியது உறுதிப்படுத்தப்பட்டால் அவருக்கு மேலும் பல ஆண்டுகள் சிறைத்தண்டனை கிடைக்க வாய்ப்பு உள்ளதாக டி.ஐ.ஜி. ரூபா கூறி உள்ளார்.
சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் அடைக்கப்பட்டுள்ளனர்.
சிறையில் சசிகலா, இளவரசி, சுதாகரன் மற்றும் இன்னும் சில வி.ஐ.பி-களுக்கு விதிமுறைகளை மீறி சலுகைகள் வழங்கப்படுவதாக ரூபா ஐ.பி.எஸ் பரபரப்பு தகவலை வெளியிட்டார்.
சசிகலாவின் அறையில் சமையலறை, குளிர்சாதனப் பொருள்கள் இருப்பதாகத் தெரிவித்தார். இதற்காக, சிறைத்துறை உயர் அதிகாரிகளுக்கு 2 கோடி ரூபாய் வரை லஞ்சமாகக் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் ரூபா தெரிவித்தார்.
இந்த விவகாரம் கர்நாடக அரசியலிலும் ஐ.பி.எஸ் வட்டாரத்திலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், செய்தியாளர்களைச் சந்தித்த ரூபா, சசிகலாவுக்கு தற்போது 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், சிறையில் விதிமுறைகளை மீறியது குறித்த குற்றச்சாட்டுக்கள் உறுதிப்படுத்தப்பட்டால் அவருக்கு மேலும் பல ஆண்டுகள் சிறைத்தண்டனை கிடைக்க வாய்ப்பு உள்ளது என்றார்.
-lankasri.com
அப்படியெல்லாம் சொல்ல முடியாது அம்மணி! அவரிடம் இன்னும் கொள்ளையடித்த பல ஆயிரம் கோடிகள் உள்ளன! இன்னும் அவரால் ஒவ்வொரு வரையும் பணத்தால் துவைத்து எடுக்க முடியும்!
இந்தியாவில் பணம் அரசியலில் உள்ளவர்கள் சுதந்திரமாக வளம் வரலாம்.ஊழல் அங்குள்ள வாழ்க்கை முறை .எவ்வளவு நடந்திருக்கிறது ஆனால் இன்றும் அவள்-சின்னம்மா? இதிலிருந்து தெரியவேண்டும் அங்கு யாருக்கும் \அக்கறை இல்லை– தமிழ் நாட்டில் நடந்த ஊழலுக்கு அங்கு ஆட்சி கலைத்திருக்கப்பட்டு இருக்க வேண்டும். ஆனால் இப்போது என்ன நடக்கிறது-வடக்கத்தியானுக்கு ஜால்றா போட்டு ஆட்சியை நிலைக்க வைத்திருக்கிறார்கள்.
முன்பு கவியரசு கண்ணதாசன் அவர்கள் சொன்ன வேடிக்கையான நகைச் சுவையொன்று, படித்த ஞாபகம்; கள்ள நோட்டு அடித்தக் குற்றவாளியை சிறையில் போட்டார்களாம்; சிறையிலேயும் அங்கு அவன் தன் கைவரிசையைக் காட்டிவிட்டானாம்; அங்கேயும் கள்ள நோட்டு அடிக்கத் தொடங்கி விடடானாம்; அவன் எப்படிப் பட்டக் கயவனாக இருந்திருக்க வேண்டும்!. இனிமேல் அவனை என்னச் செய்வது, எங்கு அடைப்பதென்றேத் தெரியாமல் விழித்தார்களாம் சிறை அதிகாரிகள்; சசிக்கலா கதையைக் கேட்டால் இந்தக் கதைதான் ஞாபகத்திற்கு வருகின்றது; சிறையிலேயே இந்த ராட்ஷசி இப்படியென்றால். ஒருவேளை இவர்கள் தமிழக முதலமைச்சராக வந்திருந்தாள் என்ன என்ன அசிங்கமெல்லாம் நடந்திருக்குமோ; தெரியவில்லை!. நல்ல வேலை தமிழ் நாடு தப்பிவிட்டது.
அப்படியெல்லாம் எங்கள் ஆயாவை சொல்லக்கூடாது …சாராயம் ..பிரியாணி கொடுத்தால் எங்கள் புரட்சி தலைவி சின்னமா வாழ்க என்று கூவ லட்ச்சம் சுரணை கெடட பிறவிகள் தகர தமிழ் நாட்டில் உள்ளது ..மட்டும் அல்ல பணம் வாணங்கி கொண்டு இவளையும் கூட்டத்தையும் ஆட்சியில் அமர்த்த துடிக்கின்றன யார் யாரோ சினிமா நடிகனுக்கு தீ குளிக்கும் பிண்டங்கள் ..ஜெயா இறந்த பொது மூச்சு கூட விடவில்லை ..ஒரு ஊர்வலம் ? விசாரணை கோரி ஒரு கூட்டம் .எதுவும் நடக்கவில்லை .இந்த ஜென்மங்கள் என்றும் திருந்தாது
இவளும் இவள் கூட்டமும் ஆட்சி அமைத்தது இருந்தால் தக்க தமிழகத்தை ஆசியாவில் மற்றொரு BALI (இந்தநேசியா ) ஆக்கி பணமா சம்பாதிப்பார்கள்