மத்தியப்பிரதேச மாநிலத்தில் தொடர்ந்து அதிகரித்து வரும் தக்காளி விலையால் மார்க்கெட்டில் தக்காளிகளுக்கு துப்பாக்கி ஏந்திய காவலர் படையினர் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டுள்ளார்கள்.
பொதுமக்களின் அத்தியாவசிய பொருட்களின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. முக்கியமாக இந்தியாவில் பல மாநிலங்களில் தக்காளியின் விலை கிலோ 120 முதல் 150 ரூபாய் வரை விற்கப்படுகிறது.
இந்நிலையில், விலை ஏற்றத்தால் மத்தியபிரதேச மாநிலத்தில் உள்ள இந்தூர் மார்க்கெட்டில் தக்காளியை பாதுகாக்கும் விதத்தில் துப்பாக்கி ஏந்திய காவல் படையினரை மாநில அரசு நியமனம் செய்துள்ளது.
இதைதொடர்ந்து, காவல் படையினர் மார்க்கெட்டில் உள்ள தக்காளி கடைகளின் முன்னர், கைகளில் துப்பாக்கி ஏந்தியபடி பாதுகாப்பு அளித்து வருகின்றனர்.
இதை காய்கறி வாங்க வருவோர் ஆச்சரியத்துடன் பார்த்துச் செல்கின்றனர்.
ஏற்கனவே, மும்பை தஹிசார் பகுதியில் உள்ள மார்க்கெட்டில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் 700 கிலோ தக்காளியை மர்ம ஆசாமிகள் சிலர் திருடிச் சென்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது
-lankasri.com