ரூ. 2000 நோட்டுகள் அச்சிடுவது நிறுத்தம்!

money-11-600-26-1501034340

டெல்லி: ரூ 2000 புதிய நோட்டுகளை அச்சிடுவதை ரிசர்வ் வங்கி நிறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் ரூ 2000 நோட்டுகளை புழக்கத்திலிருந்து ஒழிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.

கடந்த ஆண்டின் இறுதியில் ரூ 500, 1000 நோட்டுகளை ஒழிப்பதாக பிரதமர் மோடி அறிவித்தார். அதற்கு பதில் புதிய ரூ 500 மற்றும் 2000 நோட்டுகள் அச்சிடப்பட்டு புழக்கத்துக்கு விடப்பட்டன. இதன் மூலம் மக்கள் சொல்லொணாத் துயரங்களுக்கு ஆளாகினர்.

இப்போது ரூ 2000 நோட்டு கொண்டு வரப்பட்டு ஒரு ஆண்டு கூட முடியாத நிலையில், அவற்றை புழக்கத்திலிருந்து ஒழிக்க அரசு முடிவு செய்துள்ளது. அதன் ஒரு பகுதியாக ரூ 2000 நோட்டுகள் அச்சிடுவதை ரிசர்வ் வங்கி நிறுத்தி வைத்துள்ளது. அதற்கு பதில் புதிய ரூ 500 மற்றும் ரூ 200 நோட்டுகளை அடிப்பதில் மும்முரம் காட்டி வருகிறது.

ரூபாய் நோட்டு அச்சக தகவல்பசி, இதுவரை 3.7 பில்லியன் (ரூ 7.4 ட்ரில்லியன்) 2000 ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கப்பட்டுள்ளன. அதே போல, 14 பில்லியன் 500 ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கப்பட்டு புழக்கத்தில் விடப்பட்டுள்ளன.

சமீப நாட்களாக ரூ 2000 நோட்டுகள் ஏடிஎம்களில் கிடைப்பதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

tamil.oneindia.com

TAGS: