ஆழ்கடல் மீன் பிடிப்பு பயன்படுத்துவதன் மூலம் மீனவர்கள் பிரச்சினைகளில் இருந்து விடுபடலாம் பிரதமர் மோடி

Modi_SECVPFராமேசுவரம்,

ராமேசுவரத்தில் நடைபெற்ற விழாவில் அப்துல்கலாம் மணிமண்டபத்தை திறந்து வைத்த பிரதமர் மோடி, தமிழ்நாட்டின் முன்னேற்றத்துக்குதேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு வழங்கும் என்று உறுதி அளித்தார்.

மண்டபம் கடலோர காவல் படை குடியிருப்பு மைதானத்தில் நடைபெற்ற விழாவில் கலந்து கொண்டு ஆழ்கடல் மீன் பிடிப்பு அனுமதி ஆணைகள் வழங்கும் திட்டம், ராமேசுவரம்-அயோத்தி-பைசாபாத் வாராந்திர புதிய ரெயில் சேவை ஆகியவற்றை தொடங்கி வைத்தார். மேலும், புதிதாக அமைக்கப்பட்டு உள்ள ராமேசுவரம்-முகுந்தராயர்சத்திரம்-தனுஷ்கோடி-அரிச்சல்முனை சாலையையும் நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

விழாவில் பிரதமர் மோடி பேசும் போது கூறியதாவது:-

நமது மீனவர்கள் நம் நாட்டின் எல்லையை கடந்து அடுத்த நாட்டின் கடல் எல்லைக்குள் செல்லும் போது பல்வேறு சிரமங்களை அவர்கள் சந்திக்க நேரிடுகிறது. இந்த பிரச்சினையை தீர்க்க நாம் ஆழ்கடல் மீன் பிடிப்பு திட்டத்தை செயல் படுத்த வேண்டும். ஆழ்கடலில் மீன்பிடிப்பதற்கான படகை பயன்படுத்துவதன் மூலம் நமது மீனவர்கள் பல்வேறு பிரச்சினைகளில் இருந்து விடுபடலாம்.

பாரதீய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆட்சியில் மத்திய அரசு ஊழியர்களின் வேலை கலாசாரத்தில் மாற்றம் ஏற்பட்டு இருக்கிறது. முன்பு அலுவலகத்துக்கு பணிக்கு வந்த சுமார் ஒரு மணி நேரத்தில் டீ குடிக்க வெளியே சென்று விடுவார்கள். ஆனால் இப்போது அந்த நிலைமை மாறிவிட்டது. இந்தியாவின் 125 கோடி மக்களில் ஒவ்வொருவரும் ஒரு அடி முன்னால் சென்றால், இந்த நாடு 125 கோடி அடி முன்னேறும்.

இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

-dailythanthi.com

TAGS: