அரியானா மாநிலத்தை சேர்ந்த மதன் லால் என்பவர் தனது இரு கைகளையும் இழந்த போதிலும் தன்னம்பிக்கையோடு தனது இரு கால்களையும் வைத்து தையல் தொழில் செய்து வருகிறார்.
பிறப்பிலேயே தனது இரு கைகளையும் இழந்த மதன் லால், தான் எதிர்காலத்தில் ஒரு தையல்காரராக வருவார் என கனவில் கூட நினைத்து பார்த்திருக்கமாட்டார்.
தையல் கற்றுக்கொள்வதற்காக அரியானா மாநிலத்தின் பல்வேறு நகரங்களில் உள்ள தையல்காரர்களை சந்தித்துள்ளார். ஆனால், 15 நாட்களுக்கு மேல் எந்த கடைக்காரரும் இவரை தங்கள் கடையில் வைத்துக்கொள்ள தயாராகவில்லை.
அனைத்து தையல் கடைக்காரர்களுக்கும் இவர் மீது கோபம் ஏற்பட்டதே தவிர, யாரும் கற்றுத்தருவதற்கு தயாராக இல்லை. அதன்பின்னர் தன்து விடாமுயற்சியால் தையல் தொழிலை கற்றுக்கொண்ட இவர் தற்போது சிறந்த தையல்காராக வலம் வருகிறார்.
கைகள் இல்லாவிட்டாலும், தனது கால்களை வைத்து அழகாக ஆடைகளை தைக்கிறார். இவர் தனது கிராமத்தில் உள்ள 5 முதல் 7 சிறுவர்களுக்கு தையல் பயிற்சி கொடுத்து வருகிறார்.
-lankasri.com