மாட்டிறைச்சி ஏற்றுமதியில் உலகளவில் மூன்றாவது இடத்தை இந்தியா பெற்றுள்ளது. அடுத்த 10 ஆண்டுகளுக்கு உலகின் முன்னணி மாட்டிறைச்சி ஏற்றுமதி செய்யும் நாடாக இந்தியா இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உலக உணவு, விவசாய அமைப்பு பொருளாதார கூட்டமைப்புடன் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த தகவல் இடம் பெற்றுள்ளது.
2016ம் ஆண்டு 1.56 மில்லியன் டன் மாட்டிறைச்சியை இந்தியா ஏற்றுமதி செய்துள்ளது. மாட்டிறைச்சி ஏற்றுமதி வரும் 2026ம் ஆண்டு 1.93 மில்லியன் டன்னாக உயரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவில் இருந்து அதிக அளவு எருமை இறைச்சி ஏற்றுமதி செய்யப்படுவதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில் குறித்த அறிக்கை முக்கியத்துவம் பெறுகின்றது.
2016-17ம் ஆண்டில் 3.76 பில்லியன் மதிப்பிலான எருமை இறைச்சி இந்தியா ஏற்றுமதி செய்திருப்பதாகச் சொல்லப்படுகிறது. இந்தியாவிடம் இருந்து மியான்மர் நாடுதான் அதிகளவில் மாட்டிறைச்சியை இறக்குமதி செய்கிறது.
உலகில் மொத்த மாட்டிறைச்சி ஏற்றுமதி 10.95 மில்லியன் டன் ஆகும். 2026ம் ஆண்டு 12.43 மில்லியன் டன்னாக இது உயரக் கூடும். அதிகளவில் மாட்டிறைச்சியை ஏற்றுமதி செய்யும் நாடுகளில் பிரேசில் முதலிடத்திலும் அவுஸ்திரேலியா இரண்டாவது இடத்திலும் உள்ளன.
-lankasri.com