காவி நிறத்தில் கலாம் சிலை அமைக்கத் தமிழக அரசுதான் காரணம்.. சீமான் ஆவேசம்

APJ-ABDUL-KALAMராமநாதபுரம்: அப்துல் கலாம் நினைவிடத்தில் உள்ள அவரது சிலை மற்றும் பகவத் கீதை ஆகியவை காவி நிறத்தில் அமைக்கப்பட்டுள்ளதற்குத் தமிழக அரசு உடந்தையாக இருந்துள்ளது என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றம்சாட்டியுள்ளார்.

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் பேய்க்கரும்பு பகுதியில் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் நினைவிடத்தில் மத்திய அரசு சார்பில் மணிமண்டபம் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ளது. இந்த மணி மண்டபத்தைப் பிரதமர் மோடி கடந்த 27ம் தேதி திறந்து வைத்தார்.

அங்கு, அப்துல் கலாம் வீணை வாசிப்பது போன்று சிலை அமைக்கப்பட்டுள்ளது. அருகில் பகவத் கீதையும் அமைக்கப்பட்டுள்ளது. இவை அனைத்தும் காவி நிறத்தில் வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. பாஜக மத்தியில் ஆட்சி நடத்தி வருவதால் இஸ்லாமியரான அப்துல் கலாம் அருகில் பகவத் கீதை வைத்திருப்பதும், காவி நிறத்தில் வடிவமைக்கப்பட்டிருப்பதற்கும் கடும் கண்டனம் எழுந்துள்ளது.

இந்நிலையில், இன்று ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் உள்ள முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் சீமான் அஞ்சலி செலுத்த சென்றார். அப்போது, சீமான், அனைத்து மதத்தினராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட அப்துல் கலாம் நினைவிடத்தில் அனைத்து மத நூல்களையும் வைத்திருக்கலாம் என்று கூறியுள்ளார். மேலும், காவி நிறத்தில் கலாம் சிலை அமைக்கப்பட்டுள்ளதற்குத் தமிழக அரசு உடந்தையாக இருந்துள்ளது என்று சீமான் குற்றம்சாட்டியுள்ளார்.

tamil.oneindia.com

TAGS: