டோக்லாமில் படை குறைப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை: சீனாவுக்கு இந்தியா பதிலடி

dhok lam

புதுடில்லி: சிக்கிமின் டோக்லாம் பகுதியில் படை குறைப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை என சீனாவுக்கு இந்தியா பதிலடி கொடுத்துள்ளது.
இந்தியா-சீனா-பூட்டான் எல்லை பகுதியான சிக்கிம் மாநிலத்தின் டோக்லாம் பகுதியில் சீன ராணுவத்தினர் ஊடுருவினர். இதனால் இந்தியா-சீனா நாடுகளிடைய பிரச்னைக்குரிய பகுதியாக உள்ளது. ஆனால் தங்கள் நாட்டு எல்லைக்குள் இந்திய படைகள் ஊடுருவியதாக சீனா குற்றம்சாட்டியுள்ளது.

இந்நிலையில் சீனா அரசு 15 பக்க அறிக்கையை வெளியிட்டது. அதில் டோக்லா பகுதியில் இந்திய ராணுவத்தினர் கடந்த ஜூன் 18-ம் தேதி முதல் சீன எல்லைக்குள் ஊடுருவி 100 மீட்டர் அளவிற்கு அத்துமீறியுள்ளனர். மேலும் 40 பேராக இருந்த எல்லை பாதுகாப்பு படை வீரர்கள், ஜூலை மாதத்தில் 400 வீரர்களாக அதிகரித்துள்ளனர். மேலும் புல்டோசர் ஆகியவற்றையும் சீன எல்லைக்குள் இந்தியா நிறுத்தியுள்ளது. உடனடியாக இந்திய படைகள் வாபஸ் பெற வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளது
இதற்கு இந்தியா தரப்பில் , டோக்லாம் பகுதியில் படைகளை குறைப்பது என்ற பேச்சுக்கே இடமில்லை. சீனா தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ளாத வரை அதே நிலை தான் நீடிக்கும். இவ்வாறு சீனா அறிக்கைக்கு இந்தியா பதிலடி கொடுத்துள்ளது.

-dinamalar.com

TAGS: