அன்று மனிதக் கழிவுகளை கையால் அள்ளிய பெண்: இன்று எப்படி இருக்கிறார் தெரியுமா?

ஹரியானாவைச் சேர்ந்தவர் கௌஷல் பன்வார். தலித் குடும்பத்தில் பிறந்ததால், பெற்றோருடன் சேர்ந்து தன்னுடைய இளம் வயதிலே மனிதக்கழிவுகளை கையால் அள்ளும் தொழிலை மேற்கொண்டார்.

இவருக்கு பள்ளியில் படிக்கும் போதே சமஸ்கிருதத்தின் மீது ஆர்வம் இருந்துள்ளது. ஆனால் ஆசியர்கள் இவர் தலித் என்ற காரணத்தை சுட்டிக்காட்டி சமஸ்கிருதம் பாடத்தை படிக்க அனுமதிக்கவில்லை.

அதற்கு மாறாக அந்த ஆசிரியர் உன் பெற்றோர் என்ன வேலை சொல்கிறார்களோ அதை செய் என்று கூறியுள்ளார். ஆனால் கொளஷல் சமஸ்கிருத மொழியின் மீது ஆர்வம் கொண்டதை கண்ட் அந்த ஆசியர் சமஸ்கிருதம் படிக்க வகுப்பிற்குள் அனுமதித்துள்ளார்.

கௌஷல் வகுப்பில் கடைசி வரிசையில் தான் அமர வேண்டும் எனவும் கூறியுள்ளார். அதை ஏற்றுக் கொண்ட கெளஷல் படிக்கும்போதே, தன் பெற்றோருடன் கையால் மலம் அள்ளும் தொழிலையும் செய்து வந்துள்ளார்

சமஸ்கிருதத்தின் மீது கொண்ட ஆர்வத்தால், அவர் படிப்பில் சிறந்து விளங்கினார். அவர் வகுப்பில் கேள்விகளுக்கு சரியான பதிலைக் கூறும்போதெல்லாம், மற்ற உயர்ந்த’ சமூகத்தை சேர்ந்த மற்ற மாணவர்கள் அவரை வசைபாடினர். அவருடைய சமூகத்தின் பெயரால் மற்ற மாணவர்கள் கேலி செய்துள்ளனர்.

இதைத் தொடர்ந்து குழந்தைப்பருவம், இளம்பருவம் என எல்லா வயதிலும், பள்ளி, ஹரியானா கல்லூரி, டெல்லி பல்கலைக்கழகம் என எல்லா இடங்களிலும், சாதியின் பெயராலேயே அவர் அடையாளப்படுத்தப்பட்டிருக்கிறார்.

சமஸ்கிருதம் படித்தபோதுதான் ஜாதிகளைப் பற்றியும், இந்தியா எவ்வாறு சாதிய சமூகமாக உள்ளது என்பதைக் குறித்தும் கௌஷல் அறிந்துகொண்டார்.

இப்படி பல பிரச்சனைகளை சந்தித்து தற்போது சமஸ்கிருதம் பாடத்தில் பி.எச்.டி. பட்டமும்,டெல்லியில் உள்ள மோதிலால் நேரு கல்லூரியில் சமஸ்கிருத துறையில் பேராசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.

இது குறித்து அவர் கூறுகையில், தற்போதும் தான் ஜாதியின் பெயரால் அவமானப்படுத்தப்படுவதாகவும், அவர்களுடைய வசவுகளையும் ,கேலிகளையும் புறந்தள்ளி சென்று கொண்டே இருப்பதுதான் தன்னுடைய வெற்றி என்று கூறியுள்ளார்.

-lankasri.com

TAGS: