இந்தியா படைகளை திரும்ப பெறவில்லை என்றால் கடும் விளைவை சந்திக்கும் என சீனா மிரட்டல்

dhok lam

சிக்கிம் எல்லை அருகே இந்தியா-சீனா-பூடான் நாடுகள் சந்திக்கும் முச்சந்திப்பான டோக்லாம் பகுதியில் சீன ராணுவம் மேற்கொண்ட சாலைப்பணிகளை இந்திய வீரர்கள் தடுத்து நிறுத்தினர்.

இந்தியாவின் வடகிழக்கு பகுதிகளுக்கு ஏற்படும் பாதுகாப்பு அச்சுறுத்தலை கருத்தில் கொண்டு இந்திய ராணுவம் இந்த நடவடிக்கையை மேற்கொண்டது.  இதனால் இரு நாடுகளுக்கும் இடையே மோதல் போக்கு ஏற்பட்டு உள்ளதால், சிக்கிம் எல்லையில் இரு நாடுகளும் படைகளை குவித்து உள்ளன. இந்தியா தனது படைகளை வாபஸ் பெற வேண்டும் என கூறி வரும் சீனா, இல்லாவிட்டால் கடும் விளைவுகள் ஏற்படும் என மிரட்டி வருகிறது. இந்தியா இருதரப்பும் ராணுவத்தை பழைய நிலைக்கு திரும்ப அழைக்க வேண்டும் என கூறிவிட்டது. சீனா மிரட்டும் வகையில் தொடர்ச்சியாக அறிக்கையை வெளியிடும் நிலையில் இந்தியா தன்னுடைய நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளது.

“சீனா – பூடான் எல்லை விவகாரம் இருநாடுள் இடையிலான பிரச்சனையாகும். இதில் இந்தியாவிற்கு எந்தஒரு சம்பந்தமும் கிடையாது.” என அந்நாட்டு வெளியுறவுத்துறை அறிக்கை வெளியிட்டது. டோக்லாமில் இந்திய தரப்பில் படை எண்ணிக்கை 400-ல் இருந்து 40 ஆக குறைக்கப்பட்டு விட்டதாகவும், இந்தியாதான் ஆக்கிரமிப்பில் ஈடுபட்டு உள்ளதாகவும் சீனா அறிக்கையை வெளியிட்டந்து. இந்திய பாதுகாப்புத் துறை தகவலானது இதனை மறுத்தது, படை எண்ணிக்கையானது குறைக்கப்படவில்லை என தெரிவித்தது.

இந்தியா தன்னுடைய நிலைப்பாட்டில் ஸ்திரமான நிலையில் உள்ளநிலையில் மிரட்டல் விடுப்பது போன்று அறிக்கையை தொடர்ச்சியாக சீனா வெளியிட்டு வருகிறது. இந்தியா பிரச்சனையை பேச்சுவார்த்தையின் மூலம் தீர்த்துக் கொள்ள விரும்புவதாக தெளிவாக கூறிவிட்டது.

இப்போதும் இந்தியா படைகளை திரும்ப பெறவில்லை என்றால் கடும் விளைவுகளை சந்திக்கும் என சீனா மிரட்டல் விடுத்து உள்ளது.

டெல்லியில் உள்ள சீன தூதரக அதிகாரி, டோக்லாம் பீடபூமியில் இருந்து இந்திய ராணுவம் வெளியேற வேண்டும், இல்லையெனில் பெரும் விளைவை சந்திக்கும் என கூறிஉள்ளார். பாதுகாப்பு கவலை எனக்கூறி மூன்றாவது நாட்டிற்காக இந்தியா எல்லையை தாண்டி சீனப்பகுதிக்குள் வந்தது சட்டவிரோதமானது என சீன நாட்டின் துணைத் தூதர் லியூ ஜின்சாங் செய்தியாளர்களிடம் கூறிஉள்ளார்.  படைகளை உடனடியாக திரும்ப பெற வேண்டும், இல்லையெனில் கடும் விளைவு நேரிடும் என கூறிஉள்ளார் லியூ ஜின்சாங். என்ன விளைவு என்பதை விரிவாக கூற மறுத்துவிட்டார்.

“ராணுவ நடவடிக்கை தேர்வு என்பது இறையாண்மைக்கு அடிப்படை உத்திரவாதமாகும்” என அந்நாட்டு அதிபரின் கூற்றை குறிப்பிட்டு உள்ளார்.

-dailythanthi.com

TAGS: