திருவனந்தபுரம்: கேரளாவில் இருக்கும் சூழல் கவலை அளிக்கிறது என்றும், சி.பி.எம்,., ஆட்சி வந்தால் வன்முறை அதிகரிக்கும் என்றும் மத்திய அமைச்சர் ஜெட்லி நிருபர்களிடம் தெரிவித்தார். மேலும் கேரளாவில் ஒரு அச்சமான சூழல் நிலவுகிறது. கேரள பா.ஜ., தொண்டர்களுக்கு மத்திய அரசு முழு ஆதரவாக இருக்கும் என்றும் கூறினார்.
கேரளாவில் கொலையான ஆர்.எஸ்.எஸ்., பிரமுகர் ராஜேஷ் வீட்டிற்கு சென்று அவரது உறவினர்களுக்கு மத்திய நிதி அமைச்சர் அருண்ஜெட்லி ஆறுதல் தெரிவித்தார். இவருடன் மாநில தலைவர் குமணம் ராஜசேகரன் , தேசிய செயலர் எச்.ராஜா உடன் சென்றனர். கொலையான பிரமுகர் குடும்பத்தினரிடம் ஜெட்லி ஆறுதல் கூறினார்.
தொடர்ந்து நடந்த கூட்டத்தில் ஆர்.எஸ்.எஸ்., பிரமுகர் கொல்லப்பட்டது காட்டுமிராண்டித்தனம். கொள்கைக்காக அவர் தன் உயிரை விலை கொடுத்துள்ளார். அவரது கொள்கைகயை அடக்குவதற்காகவும், மிரட்டுவதற்காகவும் நடத்தப்பட்டிருக்கிறது. சம்பந்தப்பட்டவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் . மாநில அரசு முழு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டு கொண்டார்.
-dinamalar.com

























