நீதியரசர் தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வில் நீதியரசர்கள், அஷோக் பூஷண் மற்றும் அப்துல் நசீர் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இவ்வழக்கானது லக்னோ உயர்நீதிமன்றம் அளித்த நிலத்தை மூன்றாக பங்கிட்டு வழங்குவது என்ற தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்யப்பட்டது. இவ்வழக்கை விரைந்து விசாரிக்க வேண்டும் என்று பாஜக தலைவர் சுப்ரமணியன் சுவாமி நீதிமன்றத்தை கேட்டுக்கொண்டதை அடுத்து இப்போது அமர்வு அமைக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கு கடந்த ஏழு வருடங்களாக உச்சநீதிமன்றத்தில் நிலுவையிலுள்ளது. சுப்ரமணியன் சுவாமி மற்றொரு மனுவில் தடைகளின்றி தற்காலிக ராமர் கோயிலில் வழிபடும் உரிமை நிலைநாட்டப்பட வேண்டும் என்றும், உச்ச நீதிமன்றம் தன்னை இந்த விஷயத்தில் தலையீடு செய்ய அனுமதி கொடுத்துள்ளது என்றும் அவர் தெரிவித்தார். எனவே விரைந்து வழக்கை விசாரிக்க வேண்டும் என்று அவர் கோரினார்.
-dailythanthi.com