கர்நாடகாவில் உள்ள அனைத்து வங்கி ஊழியர்களுக்கும் கன்னடம் மொழி தெரிய வேண்டும், இல்லை என்றால் பணி நீக்கம் செய்யப்படுவீர்கள் என்று கன்னட மேம்பாட்டு ஆணையம் எச்சரித்துள்ளது.
கன்னட மேம்பாட்டு ஆணையம் திங்கட்கிழமை வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பில் அனைத்துத் தேசிய, கிராமப்புற மற்றும் திட்டமிட்ட வங்கிகளில் உள்ள ஊழியர்கள் கன்னடம் பேசத் தெரியவில்லை என்றால் 6 மாதத்தில் கன்னடம் கற்றுக்கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளது.
பணி நீக்கம்
ஒரு வேலை 6 மாதங்களுக்குள் வங்கி ஊழியர்கள் கன்னடம் கற்றுக்கொள்ளவில்லை என்றால் பணிநியமன விதிகளின் படி வேலையில் இருந்து நீக்கப்படுவார்கள் என்று கன்னட மேம்பாட்டு ஆணையத்தின் தலைவர் எஸ்ஜி சித்தராமமையா தெரிவித்துள்ளார்.
தினசரி வங்கி பணிகள் உள்ளூர் மொழியில்
கன்னட மேம்பாட்டு ஆணையம் கர்நாடகாவில் தினசரி வங்கி பணிகளை உள்ளூர் மொழியில் தான் செய்ய வேண்டும், இது பெங்களூரு உள்ளிட்ட நகரங்கள் மட்டும் இல்லாமல் கிராமப் புற பகுதி வங்கி சேவைகளுக்கும் பொருந்து என்றும் கூறியுள்ளது.
#NammaBankuKannadaBeku
சென்ற மாதம் சமுக வலைத் தளங்களில் #NammaBankuKannadaBeku என்ற டேக் பிரச்சாரம் செய்யப்பட்டது. அதன் ஒரு கட்டமாகக் கர்நாடக வங்கிகளில் கன்னடம் வேண்டும் என்றும் பிரச்சாரம் துவங்கியுள்ளது. இதனை அங்குள்ள பல அரசியல் கட்சிகளும் வரவேற்றுள்ளனர்.
மெட்ரோ சில நாட்களுக்கு முன்பு
பெங்களூரு மெட்ரோவில் உள்ள இந்தி எழுத்துக்கள் மை பூசப்பட்டு அளிக்கப்பட்டது.
இந்தி பிரிவு போன்று கன்னடா பிரிவு
இந்தி பிரிவு போன்று கன்னடா பிரிவு அனைத்து வங்கிகளிலும் இருக்க வேண்டும், இதனை மாநிலம் முழுவதும் அமல்படுத்த வேண்டும் என்று கன்னட மேம்பாட்டு ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
கன்னட மேம்பாட்டு ஆணைய அதிகாரம் உள்ளதா?
கர்நாடகாவில் உள்ள அனைத்து வங்கி அதிகாரிகளும் மூன்று மொழி கொள்கையை அனைத்து விளம்பரங்களிலும் பின் பற்ற வேண்டும் என்று கன்னட மேம்பாட்டு ஆணையம் கூறியுள்ளது. ஆனால் இதுவரை வங்கி ஊழியர்களைப் பணி நீக்கம் செய்யக் கன்னட மேம்பாட்டு ஆணையத்திற்கு அதிகாரம் உள்ளதா என்பது தெரியவில்லை.
ஐசிஐசிஐ வங்கி
சில மாதங்களுக்கும் முன்பு ஐசிஐசிஐ வங்கி காசோலை ஒன்றைக் கன்னடத்தில் விவரங்கள் பூர்த்திச் செய்யப்பட்டதால் கொச்சைபடுத்தபப்ட்டு நிராகரிக்கப்பட்டுள்ளது. இதனால் அந்த வாடிக்கையாளர் நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்துள்ளார்.