கேரளாவில் இருந்து கடந்த 5 ஆண்டுகளில் காணாமல் போனவர்கள் 42 பேர் ஐ.எஸ் உள்பட பல்வேறு அமைப்புகளில் சேர்ந்து உள்ளனர் என முதல் மந்திரி பிரணாய் விஜயன் நேற்று சட்டசபையில் தெரிவித்து உள்ளார்.
மேலும் அவர் கூறியதாவது:-
இந்த காணமல் போனவர்கள் பற்றி எந்த தகவலும் தெரியவில்லை. இது தொடர்புடைய அனைத்து வழக்குகளையும் தேசிய புலனாய்வுத்துறை விசாரித்து வருகிறது.
காணமல் போனவர்கள் இறந்து போனதாக மத்திய புலனாய்வுத்துறையில் மாநில அரசுக்கு எந்த தகவலும் இதுவரை கிடைக்கவில்லை. கேரளாவில் 2016 ம் ஆண்டு எல்.டி.எப். ஆட்சிக்கு வந்ததில் இருந்து ஆர்எஸ்எஸ் ஆர்வலர்கள் சம்பந்தப்பட்ட 281 வன்முறை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என கூறினார்.
-dailythanthi.com