நாடாளுமன்றத்தில் தமிழில் பேசியதற்கு எதிர்ப்பு: கொந்தளித்த தம்பிதுரை

thambijanநாடாளுமன்றத்தில் தமிழில் பேசிய கரூர் எம்பியும், துணை சபாநாயகருமான தம்பிதுரைக்கு மற்ற எம்பிக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் 75வது ஆண்டு விழாவை ஒட்டி நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற சிறப்பு கூட்டத்தில் அதிமுக கரூர் எம்பி தம்பிதுரை பேசினார். அவர் தமிழில் பேசத் தொடங்கியவுடன் பிற மாநில எம்பிக்கள் எதிர்ப்பு தெரிவித்து சலசலசப்பில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தம்பிதுரை கூறும்போது, நான் தமிழில் பேசத் தொடங்கினேன், ஆனால் என் உரைக்கு மொழிபெயர்ப்பு வசதி தரப்படவில்லை, தமிழில் பேச வேண்டுமானால் முன் அனுமதி பெற வேண்டியுள்ளது.

மற்ற மொழி பேசும் எம்பிக்களுக்கும் இதே நிலைமைதான். மற்ற எம்பிக்கள் ஹிந்தியிலோ, ஆங்கிலத்திலோ பேசினால் அதை உடனுக்குடன் தாய் மொழியில் கேட்கும் வசதி இங்கு இல்லை.

இதுதான் தற்போதைய நிலைமை, நான் ஆங்கிலத்தில் பேச கட்டாயப்படுத்தப்பட்டுள்ளேன் என கூறியுள்ளார்.

இதற்கு சோனியாகாந்தி உள்ளிட்ட காங்கிரஸ் உறுப்பினர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

-lankasri.com

https://youtu.be/GepQ1524WkU

TAGS: